- புதிய வண்ணத்தில் காணப்படும் ஹேரியர்.இவி
- பாரத் மொபிலிட்டி ஷோவில் டாடாவின் ஹேரியர் இவி காட்சிப்படுத்தப்பட்டது
பாரத் மொபிலிட்டி ஷோவில் ஹேரியரின் எலக்ட்ரிக் வெர்ஷனை டாடா காட்சிப்படுத்தியது. படங்களின் படி, இந்த டாடா வாகனம் தயாரிப்புக்கு தயாராக உள்ளது. டாடாவின் இந்த இவியில் ஏடாஸ் ஃபங்ஷனும் கொடுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத் மொபிலிட்டி ஷோவில் டாடா.இவி’யின் ஸ்டாலில் ஹேரியர்.இவி காட்சிப்படுத்தப்பட்டது, அதில் ஃப்ரண்ட் பம்பரில் வெர்டிகல் ஸ்லாட் கிரிலில் ரேடார் தெரிகின்றன. இதன் மூலம் ஹேரியர்.இவியில் அட்வான்ஸ் டிரைவர் அஸ்சிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்படும் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இதுவரை ஒயிட் வண்ணத்தில் மட்டுமே காணப்பட்ட இது பாரத் மொபிலிட்டி ஷோவில் புதிய நிறமான சீவீட் க்ரீன் நிறத்தில் காணப்படுகிறது. அதன் ஐசிஇ வேரியன்ட்டில் ஏற்கனவே இந்த நிறத்தில் கிடைக்கிறது.
லெவல்-2 ஏடாஸ் அம்சங்களை ஹேரியர் இவியில் காணலாம்
2023 ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்டில் லெவல்-2 ஏடாஸ் சிஸ்டமான அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோ இ பீம் அசிஸ்ட் போன்ற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். இது தவிர, டாடாவின் சஃபாரியில் லெவல்-2 ஏடாஸ் தொகுப்பு உள்ளது, டாடாவின் பிரபலமான நெக்ஸான் லெவல்-1 ஏடாஸ் தொகுப்பைக் கொண்டுள்ளது.
ஐசிஇ வெர்ஷன் போலவே லெவல்-2 ஏடாஸ் அம்சங்களையும் ஹேரியர் இவி பெறும் என எதிர்பார்க்கிறோம். இதனுடன், இது டாடாவின் முதல் இவி ஆகும், லெவல் 2 ஏடாஸ் அம்சங்களைக் கொண்டிருக்கும்.
டாடாவின் வரவிருக்கும் எலக்ட்ரிக் கார்கள்
டாடாவின் இந்த ஃபைவ் சீட்டர் கொண்ட இவி, பஞ்ச் இவி போன்றது, பிராண்டின் புதிய ஜெனரேஷன் 2, ஒமேகா ஆர்கிடெக்சர் அடிப்படையாகக் கொண்டது, இதற்கு ஆக்டி.இவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இந்திய கார் உற்பத்தியாளர் அடுத்த ஆண்டுக்குள் டாடா ஹேரியர் இவியை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தலாம். இது தவிர, நிறுவனம் சியராவின் எலக்ட்ரிக் வெர்ஷனிலும் வேலை செய்து வருகிறது. டாடாவின் ஃபுல்லி எலக்ட்ரிக் கார்களான கர்வ் மற்றும் அவின்யாவும் விரைவில் இந்திய சந்தையில் வரும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்