- 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் ஷோகேஸ் செய்யப்பட்டது
- சஃபாரி இவி’யும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
டாடா மோட்டார்ஸ் தனது புதிய எலக்ட்ரிக் காரான டாடா ஹேரியர் இவி’யை இந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த கார் முதலில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் சமீபத்தில் நடந்த 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்பட்டது.
புதிய ஹேரியர் இவி ஆனது சீட்ஸ், ஸ்கிரீன் மற்றும் வீல் டிசைன் போன்ற பல புதுப்பிப்புகளைப் பெறுகிறது. இந்த காரின் இன்ஜின் கர்வ் இவி’யைப் போலவே இருக்கலாம், ஆனால் இது கர்வ் ஐ விட அதிக விலையில் இருக்கும் என்பதால் இது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம்.
டாடா மோட்டார்ஸ் தனது சஃபாரி இவி’யையும் அறிமுகப்படுத்தலாம், இதனால் அவர்களுக்கு கூடுதல் விருப்பங்கள் உள்ளன. டாடா ஹேரியர் இவிமாருதி eVX, டொயோட்டா அர்பன் ஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா, ஹூண்டாய் மற்றும் ஹோண்டாவின் எலக்ட்ரிக் கார்களுடன் போட்டியிடும்.
இந்த புதிய நடவடிக்கையின் மூலம், டாடா மோட்டார்ஸ் எதிர்காலத் தேவைகளுக்கு தயாராக இருப்பதைக் காட்டுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்