- இதில் ஏடாஸ் ஃபீச்சர்ஸை பெறுகிறது
- விரைவில் இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் லான்ச் ஆகும்
டாடா பிப்ரவரி 2023 இல் ஹேரியர் மற்றும் சஃபாரியின் அப்டேட்ட வெர்ஷனை லான்ச் செய்தது. இந்த அப்டேட்க்கு பிறகு இந்த எஸ்யுவியில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், இல்லுமினேட்டட் பனோரமிக் சன்ரூஃப், ஃப்ரண்ட் பவர்ட் வென்டிலேடெட் சீட்ஸ் மற்றும் ஏடாஸ் ஃபீச்சர்ஸ் போன்ற அம்சங்களை பெறுகிறது. இந்த கட்டுரையில் இந்த் இரண்டு கார்ஸின் வெயிட்டிங் பீரியட்டை பற்றி இதில் எழுதி உள்ளோம்.
தற்போது, சஃபாரி மற்றும் ஹேரியரில் முன்பதிவு செய்த நாளிலிருந்து நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை வெயிட்டிங் பீரியட்டில் உள்ளது. இது டீலர்ஷிப், இடம், வேரியண்ட், நிறம், எடிஷன் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். மேலும் விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.
டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி ஆர்டிஇ மற்றும் BS6 ஃபேஸ் 2 இணக்கமான 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 168bhp மற்றும் 350Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கண்வர்டர் கியர்பாக்ஸ் உடன் இனைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்