- அதே 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது
- 25,000 ரூபாயில் புக் செய்யலாம்
புதிய டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்ஸின் வெளியீட்டிற்குப் பிறகு, இந்திய வாகன உற்பத்தியாளர் எஸ்யுவியின் விலைகளை அக்டோபர் 17, 2023 அன்று வெளியிடத் தயாராக உள்ளது. ஃபேஸ்லிஃப்டட் டாடா ஹேரியர் மற்றும் சஃபாரியின் முன்பதிவுகள் ஏற்கனவே ரூ. 25,000 டோக்கன் தொகையில் தொடங்கியுள்ளது.
அம்சங்களைப் பொறுத்தவரை, இரண்டு எஸ்யுவிஸும் பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் சப்போர்ட் கொண்ட ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டச்-அடிப்படையிலான எச்விஏசி கண்ட்ரோல்ஸ், ஜேபிஎல்- 10-ஸ்பீக்கர் சிஸ்டம், இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், மற்றும் டூயல்-ஜோண் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், ஆம்பியன்ட் லைட்டிங், மோட் செலக்டர் டயலுடன் கூடிய புதிய கியர் லெவர், பவர்ட் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஏடாஸ் சூட் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
வெளிப்புறத்தில், ஃபிளாக்ஷிப் எஸ்யுவிஸ் ஃப்ரண்ட் மற்றும் ரியரில் லைட் பார், 19-இன்ச் அலோய் வீல்ஸ், ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் புதிய பாராமெட்ரிக் கிரில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, புதிய ஹேரியர் சன்லிட் எல்லோ, கோரல் ரெட், பெப்பிள் க்ரே, லூனார் ஒயிட், ஓபெரான் பிளாக், சீவீட் க்ரீன் மற்றும் ஆஷ் க்ரே ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. மறுபுறம், சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் காஸ்மிக் தங்கம், கேலக்டிக் சபையர், லூனார் ஸ்லேட், ஓபரான் பிளாக், ஸ்டார்டஸ்ட் ஆஷ், ஸ்டெல்லர் ஃப்ரோஸ்ட் மற்றும் சூப்பர்நோவா காப்பர் ஆகிய ஏழு வெளிப்புற வண்ணங்களுடன் இருக்கலாம்.
இரண்டு எஸ்யுவிஸும் ஒரே 2.0-லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் மூலம் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்ட்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த BS6 2.0-புதுப்பிக்கப்பட்ட இன்ஜின் 168bhp மற்றும் 350Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்