- இவற்றின் முன்பதிவு ரூ.25,000 முதல் தொடங்குகிறது
- இதில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் உள்ளது
டாடா மோட்டார்ஸ் இறுதியாக அதன் எஸ்யுவிஸான ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட்டின் விலையை நாளை அதாவது அக்டோபர் 17 ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இந்த இரண்டு எஸ்யுவிஸும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவே முதல் பெரிய அப்டேட் ஆகும். இந்த அப்டேடட் எஸ்யுவிஸ்க்கான முன்பதிவுகள் 25,000 ரூபாய்க்கு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
ஃபேஸ்லிஃப்ட் ஹேரியரின் பத்து வேரியண்ட்ஸில் இருந்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம் - ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+, அட்வென்ச்சர்+ டார்க், அட்வென்ச்சர்+ A, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ் டார்க், ஃபியர்லெஸ்+ மற்றும் ஃபியர்லெஸ்+ டார்க். மறுபுறம், புதிய சஃபாரி ஸ்மார்ட் (O), ப்யூர் (O), அட்வென்ச்சர், அட்வென்ச்சர்+, அட்வென்ச்சர்+ டார்க், அகாம்ப்லிஷ்ட், அகாம்ப்லிஷ்ட்+, அகாம்ப்லிஷ்ட் டார்க், அகாம்ப்லிஷ்ட்+ டார்க் மற்றும் அட்வென்ச்சர்+ A ஆகிய பத்து வேரியண்ட்ஸில் கிடைக்கிறது.
இந்த இரண்டு எஸ்யுவிஸும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளன, இது 168bhp மற்றும் 350Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனைப் பெறும்.
ஃபேஸ்லிஃப்ட் ஹேரியர் எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் போன்றவற்றுடன் போட்டியிடுகிறது. அதே சஃபாரி மஹிந்திரா XUV700, மஹிந்திரா ஸ்கார்பியோ என், டொயோட்டா இனோவா ஹைகிராஸ், டொயோட்டா இனோவா க்ரிஸ்டா, எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்