- வரும் வாரங்களில் இரண்டு மாடல்ஸும் லான்ச் செய்து,விரைவில் விலை அறிவிக்கப்படும்
- பொதுவான அம்சங்களாக பனோரமிக் சன்ரூஃப், ஏடாஸ், ஏர் ப்யூரிஃபையர் ஆகியவை இரண்டு மாடல்ஸிலும் உள்ளன.
வரவிருக்கும் வாரங்களில் டாடா அதன் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி ஃபேஸ்லிஃப்ட் டாடா ஹேரியரை சஃபாரியுடன் அறிமுகப்படுத்தும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இந்த அப்டேடட் மாடல்ஸை ரூ. 21,000 டோக்கன் தொகை சஃபாரிக்கு மற்றும் ரூ. 25,000 டோக்கன் தொகை ஹேரியருக்கு குடுத்து புக் செயலாம் மற்றும் இந்த மாத இறுதியில் டெலிவரிஸ் தொடங்கும்.
அப்டேடட் சஃபாரி, ப்ரான்ஜ் நிற செங்குத்து ஸ்லேட்ஸுடன் கூடிய புதிய நெருக்கமான வடிவிலான கிரில், வெல்கம் ஃபங்ஷன் உடன் கூடிய எல்இடி பார், ஃப்ரண்ட் பம்பரில் புதிய டூயல் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஒரு புதிய எக்ஸ்டீரியர் நிறம் ஆகியவற்றை பெறும். பின்புறத்தில், இது ஒரு சீக்வென்ஷியல் ஃபங்ஷன் உடன் இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப் செட்-அப், வாஷருடன் ரியர் வைப்பர் மற்றும் குட்பை ஃபங்ஷன் உடன் டெயில்கேட்டில் இயங்கும் எல்இடி ஸ்ட்ரிப்பை கொண்டுள்ளது.
வெளிப்புறத்தில், புதிய ஹேரியர் திருத்தப்பட்ட பம்பர்ஸுடன் புதுப்பிக்கப்பட்ட ஃப்ரண்ட் மற்றும் ரியர் ப்ரொஃபைலைப் பெறுகிறது. எஸ்யுவி ஆனது ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸுடன் டிஆர்எல் அமைப்பை இணைக்கும் முன்பக்கத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில்லைக் கொண்டுள்ளது. பின்னர், xx-இன்ச் அலோய் வீல்ஸ் பிளாக் நிற வீல் அர்ச்செஸ், ரூஃப், பில்லர்ஸ் மற்றும் ஓஆர்விஎம்ஸுடன் புதிய லுக்கை பெறுகின்றன.
ஃபிளாக்ஷிப் எஸ்யுவி சஃபாரி வயர்லெஸ் மொபைல் இணைப்புடன் கூடிய பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் இல்லுமினேட்டட் லோகோவுடன் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று டீஸர் வெளிப்படுத்தியது. இதனுடன், பனோரமிக் சன்ரூஃப், பவர்ட் மற்றும் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், 360 டிகிரி கேமராபோன்ற அம்சங்களையும் இது பெறலாம்.
ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட் ஒரு பெரிய 12.5-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நேவிகேஷன் ஆதரவுடன் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் மல்டி-ஃபங்ஷனல் ஸ்டீயரிங் வீல் மற்றும் டச்-அடிப்படையிலான எச்விஏசி கண்ட்ரோல் உடன் வருகிறது. வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டர் சிஸ்டம், 360 டிகிரி சரவுண்ட் கேமரா போன்ற அம்சங்களும் இருக்கும். மேலும், பனோரமிக் சன்ரூஃப், ஏடாஸ், ஏர் ப்யூரிஃபையர் ஆகியவை இரண்டு மாடல்ஸிலும் உள்ள பொதுவான அம்சங்களாகும்.
சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது 168bhp மற்றும் 350Nm டோர்க் உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் முன் சக்கரங்களுக்கு பவரை அனுப்பும் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்ட்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர, புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் டாடா அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
புதுப்பிக்கப்பட்ட ஹேரியர், சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஒரு ஆட்டோமேட்டிக் டோர்க் கன்வர்ட்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்ட அதே 2.0-லிட்டர் க்ரியோடெக் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த BS6 ஃபேஸ் 2-இணக்க மோட்டார் 168bhpமற்றும் 350Nmடோர்க்கை உற்பத்தி செய்ய டியூன் செய்யப்பட்டுள்ளது.