- டாடா ஹேரியர்க்கு மூன்று வாரங்கள் வரை காத்திருக்கும் காலம் ஆகும்
- டாடா 50 லட்சம் யூனிட் உற்பத்தியை நிறைவு செய்தது
டாடா மோட்டார்ஸ் ஹேரியர் எஸ்யுவியை ஜனவரி 2019 இல் அறிமுகப்படுத்தியது, இது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்த கார் சுமார் ஒரு லட்சம் யூனிட்ஸ் நாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹேரியர் எஸ்யுவி ரூ. 15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது மற்றும் இது ஏழு வேரியண்ட்ஸில் கிடைக்கிறது. இது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது மற்றும் 2023 மாடலில் இப்போது புதிய அம்சங்களைப் பெறுகிறது. இது புதிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 360 டிகிரி கேமரா, ஏடாஸ் அம்சங்கள் மற்றும் வெல்கம் மற்றும் மெமரி ஃபங்ஷன் உடன் ஆறு வழியில் எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட்ஸ் ஆகியவற்றைப் பெறுகிறது.
ஹேரியர் எஸ்யுவியில் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் இன்ஜின் உள்ளது, இது 168 bhp மற்றும் 350Nm டோர்க்கையும் உருவாக்குகிறது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் இன்ஜினுக்கு ஆர்டிஇ மற்றும் BS6 ஃபேஸ் 2 அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குச் தெரிவிக்கிறோம். தற்போது, இந்த எஸ்யுவியில் மூன்று வாரங்கள் வரை காத்திருக்கும் காலம் உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் 50 லட்சம் யூனிட்ஸை உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்தது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்