- அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கர்வ் ஐசிஇயின் விலை அறிவிக்கப்படும்
- இது ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது
டாடா மோட்டார்ஸ் கர்வ் கூபே எஸ்யுவியின் ஐசிஇ-பவர்ட்வெர்ஷனை ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தியது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த மாடல் இந்திய மார்க்கெட்டிற்க்கு வரும் என்றும் கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடல் தொடர்பான சமீபத்திய செய்திகள் கிடைத்துள்ளன. ஒருவேளை, இந்த மாடலில் சிஎன்ஜி வேரியண்ட் சேர்க்கப்படலாம்.
டாடா கர்வ் சிஎன்ஜி வேரியண்ட்டுடன் வரும்
கர்வ் இன்டீரியரில் பல ஃபீச்சர்ஸ் உடன் காணப்பட்டது. அதன் சென்டர் கன்சோலில் ஒரு சிஎன்ஜி பட்டனும் தோன்றியுள்ளது, இது மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறுகிறது. இது தவிர, இதன் இன்டீரியரில் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், புதிய ஸ்டைல் சென்டர் கன்சோல் மற்றும் புதிய டாஷ்போர்டு ஆகிய வற்றுடன் காணப்பட்டது. சென்டர் கன்சோல் சிஎன்ஜி பட்டனுடன் புதிய பேனலையும் இது பெறுகிறது, இதில் ஏசி கண்ட்ரோல்ஸ் மற்றும் டூயல் டோன் டோகல் சுவிட்சஸ் மற்றும் டச் சென்சிட்டிவ் பட்டன்ஸ் உடன் காணப்பட்டது.
புதிய எமிஷன் விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக சிறிய கார்ஸில் இருந்து டீசல் இன்ஜின் விருப்பம் படிப்படியாக குறைந்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், பெட்ரோல் விருப்பம் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் உள்ளது. அதே நேரத்தில், டாடா ஒருவேளை சிஎன்ஜி வேரியண்ட்டில் கர்வ்வை கொண்டு வருவதன் மூலம் பெட்ரோலின் விலை உயரும் வாடிக்கையாளர்களுக்கு சிறிது நிவாரணம் கொடுக்க விரும்புகிறது.
நெக்ஸான் சிஎன்ஜிக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன
டாடா நெக்ஸானின் சிஎன்ஜி வேரியண்ட் இந்தியாவில் பலமுறை சாலை டெஸ்டிங்கில் பார்க்கப்பட்டது. இந்த டெஸ்டிங் மாடல்ஸ் ஏற்கனவே உள்ள நெக்ஸானை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதனுடன், டாடா மோட்டார்ஸ் நெக்ஸானில் பெரிய மாற்றங்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கான ஆதாரம் இந்த மாடல்ஸின் ஸ்பை ஷாட் ட்ஸை பாருங்கள். ஸ்டீயரிங் வீல் மற்றும் ஏசி கண்ட்ரோல்ஸின் வடிவமைப்பை நெக்ஸானுக்கும் கர்வ் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும், மார்க்கெட்டில் கர்வ் சிஎன்ஜி வேரியண்ட்டின் வருகை குறித்து டாடாவிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை இல்லை. ஆனால் நெக்ஸான் சிஎன்ஜி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா மார்க்கெட்க்கு வரலாம். நெக்ஸானுக்கு கீழே உள்ள டாடா மோட்டார்ஸ் வழங்கும் மற்ற அனைத்து கார்ஸும் சிஎன்ஜி வேரியண்ட்டைப் பெறுகின்றன, பஞ்ச் தவிர, இதன் ப்ரொடக்ஷன்-ரெடி யூனிட் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது, மேலும் அப்டேடட் நெக்ஸான் அல்லது அதன் சிஎன்ஜி வேரியண்ட்டிற்கு முன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்