டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் புதிய கர்வ் கூபே எஸ்யுவியின் லான்ச் தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. கார் தயாரிப்பாளர் இந்த செக்மெண்ட்டின் முதல் காரை அறிமுகப்படுத்துவார், இது இவி மற்றும் ஐசிஇ இன்ஜின்களுடன் வழங்கப்படும், இருப்பினும் இந்த இரண்டு காரின் விலைகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுமா என்பது தெளிவாக இல்லை.
டாடா மோட்டார்ஸ் பகிர்ந்துள்ள சமீபத்திய டீஸர் வீடியோவில் கர்வ் உடன்பிறப்புகளின் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. எக்ஸ்டீரியரில், இந்த மாடலில் நெக்ஸான் ஐ நினைவூட்டும் வகையில் எல்இடி டிஆர்எல்கள், டூயல் பாட் செங்குத்தாக அடுக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்ஸ், புதிய அலோய் வீல்ஸ், ஃப்ளஷ்-ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ், ஸ்லோப்பிங்க் ரூஃப் மற்றும் ரேப்பரவுண்ட் தலைகீழ் எல்- வடிவ எல்இடி டெயில்லைட்ஸ் ஆகியவை இடம்பெறும். மேலும் ஒரு எல்இடி லைட் பார் பெற வாய்ப்புள்ளது.
டாடா கர்வின் இன்டீரியரில் சன்ரூஃப், பேடில் ஷிஃப்டர்ஸ், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஏடாஸ் சூட், டிரைவ் மோட்ஸ் மற்றும் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா கர்வ் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்ஸில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கும். இந்த பிராண்ட் இவி வெர்ஷனின் டெக்னாலஜி விவரக்குறிப்புகளை வெளியிடவில்லை, இருப்பினும் இது ஒரு முழு சார்ஜில் 500 கிமீ தூரம் வரை செல்லக்கூடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்