- கர்வ் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
- ஐசிஇ மற்றும் இவி விருபங்களில் வழங்கப்படும்
வரும் மாதங்களில் டாடா மோட்டார்ஸ் பல செக்மெண்ட்டின் புதிய கார் மாடல்கள் மற்றும் வேரியன்ட்ஸ்ஸை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் உள்ளது. அல்ட்ரோஸ் ரேசர் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், இப்போது கர்வின் புதிய ஸ்பை ஷாட்ஸ் வெளிவந்துள்ளன.
டெஸ்ட் மாடல் மூலம் டாடா கர்வின் ரியர் ப்ரோஃபைல் வெளிப்படுத்தியுள்ளது. கர்வில் இன்வர்டட் டூ-பீஸ் எல்-வடிவ எல்இடி டெயில்லைட்ஸ், பூட் மூடியில் ஒரு தனி பிரேக் லைட் மற்றும் ரிவர்ஸ் லைட்ஸ் மற்றும் பம்பரின் இருபுறமும் ஃபாக் லைட்களை வைத்திருக்கும் வெர்டிகல் ஹவுசிங் உள்ளன.
மறுபுறம், 2024 கர்வில், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, அலோய் வீல்ஸ், ஃப்ளஷ் ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ், ஏ-பில்லரில் பொருத்தப்பட்ட ஓஆர்விஎம்கள் மற்றும் ரியர் பம்பரில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் ஹோல்டர் ஆகியவை கிடைக்கும். அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த காரில் 360 டிகிரி கேமரா, எலக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டிரைவ் மோட்ஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டாடா கர்வ் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படும், இது 118bhp மற்றும் 260Nm டோர்க்கையும் உருவாக்கும், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஒரு எலக்ட்ரிக் வெர்ஷனிலும் அறிமுகப்படுத்தப்படுவது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, இது ஐசிஇ வெர்ஷன்க்கு முன் வரும், அதே நேரத்தில் சிஎன்ஜி வெர்ஷனிலும் வேலை செய்து வருகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்