- கர்வ் முதலில் இவி ரேஞ்சில் வழங்கப்படும்
- சிட்ரோன் பசால்ட் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்
வரவிருக்கும் டாடா கர்வின் வெளியீடு நெருங்கி வருவதால், ஒவ்வொரு புதிய ஸ்பை ஷாட்டும் கூபே-எஸ்யுவியின் புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது. உள்நாட்டு வாகன உற்பத்தியாளர் இவியைத் தொடர்ந்து ஐசிஇ வெர்ஷன்னை அறிமுகப்படுத்தும், மேலும் இது அதன் அனைத்து வரவிருக்கும் கார்களுக்கும் அணுகுமுறையாக இருக்கும்.
டாடா கர்வ் இப்போது எலக்ட்ரிக் சன்ரூஃப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு பனோரமிக் சன்ரூஃபாக இருக்கும், இருப்பினும் அளவு வழக்கமான அளவிலான யூனிட்டை விட சிறியதாகத் தோன்றினாலும், வாகனத்தின் ஸ்லோப்பிங்க் ரூஃப்லைன்க்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.
எக்ஸ்டீரியரில், கர்வ் ஆனது ஸ்பிளிட் ஹெட்லேம்ப் செட்டப், புதிய ஃப்ரண்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், புதிய அலோய் வீல்ஸ், ஃப்ளஷ் ஃபிட்டெட்க் டோர் ஹேண்டல்ஸ், டெயில்கேட்டில் எல்இடி லைட் பார் மற்றும் பலவற்றைப் பெற வாய்ப்புள்ளது. இந்த சிட்ரோன் C3 பசால்ட்-ரைவளின் இன்டீரியரில் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ஏசி ஃபங்ஷன்கான டச் பட்டன்கள், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை இடம்பெறும்.
டாடா கர்வ் ஐசிஇ மற்றும் இவி இன்ஜின் விருபங்காளுடன் வழங்கப்படும். ஃபாசில் எரிபொருளில்-இயங்கும் வெர்ஷனில் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-டீசல் இன்ஜின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும். எலக்ட்ரிக் வழித்தோன்றல் அதன் பேட்டரி பேக் மற்றும் மோட்டாரை நெக்ஸான் இவிலிருந்து கடன் வாங்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்