- ஆகஸ்ட் 7, 2024 அன்று நாட்டில் அறிமுகமானது
- பிஎன்கேபில் ஐந்து ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற டாடாவின் ஆறாவது கார் இதுவாகும்
டாடா தனது கர்வ் கூபே எஸ்யுவியின் பாதுகாப்பிற்காக ஃபைவ் ஸ்டார் ரேட்டிங்கை பெற்றது. இந்த கார் அடல்ட் சேஃப்டியில் 29.50/32 மதிப்பெண்களையும், சைல்ட் சேஃப்டியில் 43.66/49 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. கர்வ் டீசல் மேனுவல், பெட்ரோல் டிசிடி மற்றும் பெட்ரோல் எம்டீ வெர்ஷன்கள் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டன.
சோதனையில், வாகனம் ஓட்டுநரின் தலை, கழுத்து மற்றும் கீழ் உடலைப் பாதுகாப்பதில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. முன் பயணிக்கும் தலை, கழுத்து மற்றும் கீழ் உடலுக்கு நல்ல பாதுகாப்பு உள்ளது. ஃப்ரண்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட்டில் 14.65/16 மதிப்பெண்களைப் பெற்றது, அதே சமயம் சைட் மூவேப்ளே டிஃபார்மபிள் பேரியர் டெஸ்ட்டில் 14.85/16 மதிப்பெண்களைப் பெற்றது. குழந்தை பாதுகாப்பைப் பற்றி நாம் பேசினால், சிஆர்எஸ் மதிப்பெண் 12/12 ஆகவும், வாகன மதிப்பீட்டு மதிப்பெண் 9/13 ஆகவும் உள்ளது.
பாதுகாப்புத் தொகுப்பாக, டாடா கர்வ் அதன் அனைத்து வேரியன்ட்ஸிலும் ஆறு ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் மவுண்டிங் பாயிண்ட், இஎஸ்சி, சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் பாதசாரி பாதுகாப்பு ஆகியவற்றை தரமானதாக குடுத்துள்ளது. டாடா கர்வ் ஆகஸ்ட் 7, 2024 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் வெர்ஷன்களில் வாங்கலாம். இந்த கூபே எஸ்யுவி ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்