- இந்தியா மற்றும் தென் ஆஃப்ரிகாவில் முதலில் அறிமுகமாகும்
- நிறுவனத்தின் சி-க்யூப் ப்ரோக்ராமின் மூன்றாவது காராகும்
சில நாட்களுக்கு முன்பு, பிரெஞ்சு வாகன தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன், அதன் வரவிருக்கும் கூபே எஸ்யுவியான பசால்ட்டை டீஸ் செய்தது. இப்போது, ஆட்டோமேக்கர் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டாடா கர்வின் போட்டியாளரை வெளிப்படுத்தியுள்ளது. முன்பு C3X என்று அழைக்கப்பட்ட பசால்ட் 2024 இல் இரண்டாம் பாதியில் நாட்டில் விற்பனைக்கு வரும்.
டிசைனில், பசால்ட் ஒரு தனித்துவமான நாட்ச்பேக் டிசைன்னை கொண்டுள்ளது, இது செடான் போன்ற ஹை-ரைடு ஸ்டன்ஸ்ஸை கொண்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப்கள், ட்வீக் செய்யப்பட்ட ஃப்ரண்ட் பம்ப்பர்கள், புதிய அலோய் வீல்கள், சங்கி வீல் ஆர்ச்கள் மற்றும் டூயல்-டோன் எக்ஸ்டீரியர் பெயிண்ட் ஆகியவற்றுடன் c3 ஏர்கிராஸின் ஃப்ரண்ட் கிரிலில் நன்கு தெரிந்திருக்கிறது. ரியரில், இது ரேப்பரவுண்ட் எல்இடி டெயில்லேம்ப்கள், சில்வர் ஃபாக்ஸ் பிளேட் மற்றும் நடுவில் ஒரு பெரிய சிட்ரோன் லோகோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இன்டீரியரில், இந்த கூபே எஸ்யுவியில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கீலெஸ் என்ட்ரி, வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்னைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு முகப்பில், இது தரநிலையாக ஆறு ஏர்பேக்குகள், சென்சார்கள் கொண்ட ரியர் பார்க்கிங் கேமரா, ஐசோஃபிக்ஸ் மற்றும் டீபீஎம்எஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மாடலின் டெக்னாலஜி விவரக்குறிப்புகளை ஆட்டோமேக்கர் வெளியிடவில்லை என்றாலும், சிட்ரோன் c3 ஏர்கிராஸின் அதே இன்ஜினுடன் பசால்ட் இயங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும், இது 109bhp மற்றும் 205Nm டோர்க்கை சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஒரு டோர்க் கன்வர்டர் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்