- இந்த இன்ஜின் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது
- இதில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸ் கிடைக்கும்
டாடா மோட்டார்ஸ் அதன் புதிய 1.2 லிட்டர் டீஜிடிஐ இன்ஜினுடன் வரப் போகிறது, இது கர்வ் கூபே எஸ்யுவியில் பொருத்தப்படும். இந்த 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் முதன்முதலில் ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் இப்போது மறுபெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய டர்போ-பெட்ரோல் இன்ஜினின் பெயர் 'ஹைபரியன்' மற்றும் இது ரெவோட்ரான் இன்ஜினுடன் சேர்க்கப்படும்.
1.2-லிட்டர் டீஜிடிஐ ஹைபரியன் இன்ஜின் த்ரீ சிலிண்டர் யூனிட் ஆகும், இது BS6 ஃபேஸ் 2 இணக்கமானது மற்றும் E20ஃபியூலில் இயங்குகிறது. இந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் இன்ஜின் 5000rpm இல் 123bhp பவரையும், 1700 இல் மற்றும் 3500rpm க்கு இடையே 225Nm டோர்க்கையும் உருவாக்க முடியும். இந்த இன்ஜின் இலகுரக மற்றும் வலுவான அலுமினியத்தால் ஆனது, மேலும் நீடிக்கும். கர்வுடன் அறிமுகமாகும் இந்த புதிய இன்ஜின், பவர், மற்றும் பர்ஃபார்மன்ஸ் ஆகியவற்றின் சிறந்த சமநிலையை வழங்கும் என்று டாடா கூறுகிறது. இந்த இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும்.
மறுபுறம், கர்வ் மேலும் இரண்டு இன்ஜின் விருப்பங்களைப் பெறும், இதில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அடங்கும். இந்த இரண்டு இன்ஜின்களும் ஏற்கனவே நெக்ஸான் எஸ்யுவியில் கிடைக்கின்றன. அறிமுகத்தில், கர்வ் பெட்ரோல், டீசல் மற்றும் இவி ஆகிய மூன்று விருப்பங்களில் வரும் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுடன் போட்டியிடும். அதே நேரத்தில், இவி வெர்ஷன் மஹிந்திரா XUV400, பிஒய்டி அட்டோ 3, எம்ஜி ZS இவி மற்றும் வரவிருக்கும் க்ரெட்டா இவி ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்