- டாடா கர்வில் புதிய ஹைபரியன் டீஜிடிஐ இன்ஜினை டாடா கொண்டு வந்துள்ளது
- இது ஏழு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது
ஒரு மாதத்திற்கு முன்பு, டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் கர்வ் எலக்ட்ரிக் காரை ரூ. 17.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியது. இப்போது இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்வின் ஐசிஇ வெர்ஷனின் விலைகளை அறிவித்துள்ளது. கர்வ் ஐசிஇ வெர்ஷன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ. 9.99 லட்சம் முதல் தொடங்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
முதலில் கர்வ்வின் டிசைன் பற்றி பேசுகையில், டாடா மோட்டார்ஸ் இதில் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இது பார்ப்பதற்கு ஈர்க்கக்கூடிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதுபோன்ற டிசைன் வேறு எந்த டாடா காரிலும் இதுவரை காணப்படவில்லை. டாடா கர்வ் காரின் டிசைன் சிறப்பம்சங்களில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்ஸ், எல்இடி ஹெட்லைட்ஸ், முன் மற்றும் ரியர் எல்இடி லைட் பார்ஸ், ஃப்ளஷ்-பிட்டிங் டோர் ஹேண்டில்ஸ், டூயல்-டோன் அலோய் வீல்ஸ், எல்இடி டெயில்லைட்ஸ் மற்றும் ஸ்லோப்பிங்க் ரூஃப் ஆகியவை அடங்கும்.
கர்வ் ஐசிஇ வெர்ஷனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆறு வண்ணங்கள் மற்றும் ஏழு வேரியன்ட்ஸிலிருந்து தேர்ந்தெடுக்கலாம். இன்டீரியரைப் பொறுத்தவரை, கர்வில் பனோரமிக் சன்ரூஃப், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ரியர் ஏசி வென்ட்ஸ், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், பவர்ட் டெயில்கேட், ஆட்டோ ஹோல்ட் ஃபங்ஷன் கொண்ட எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், லெவல்-2 ஏடாஸ் சூட், வயர்லெஸ் சார்ஜர் மேலும் பல அம்சங்களுடன் வருகிறது.
டாடா 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல், புதிய 1.2 லிட்டர் ஜிடிஐ டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை டாடா கர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக, கர்வ் காரில் பிரத்யேகமாக ஹைபரியன் என்ற புதிய டீஜிடிஐ இன்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்ஜின் 123bhp பவரையும், 225Nm டோர்க் திறனையும் வெளிப்படுத்தும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ யூனிட் ஆகியவை அடங்கும்.
கர்வின் பேஸ் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருபவை:
வேரியன்ட்ஸ் | விலை |
டாடா கர்வ் பெட்ரோல் வேரியன்ட் | ரூ. 9.99 லட்சம் |
டாடா கர்வ் டீசல் வேரியன்ட் | ரூ. 11.50 லட்சம் |