- 7 ஆகஸ்ட் 2024 அன்று அறிமுகமாகும்
- டாடா கர்வ் ஆறு வண்ண விருப்பங்கள் கிடைக்கும்
டாடா கர்வ் ஆகஸ்ட் 7, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது டாடாவின் முதல் கூபே எஸ்யுவி ஆகும், இது பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் வெர்ஷனில் கிடைக்கும், இது மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் விற்கப்படும் கார்களுக்கு கடுமையான போட்டியைக் டாடா கர்வ் இருக்கும். அறிமுகத்திற்கு சற்று முன்னதாக, ஃப்ளேம் ரெட் நிறத்தில் டாடா கர்வின் புகைப்படங்கள் கிடைத்துள்ளன.
டாடா கர்வ் ஆனது ஃப்ளேம் ரெட், ப்யூர் கிரே, டேடோனா கிரே, பிரிஸ்டைன் ஒயிட், காஸ்மிக் கோல்ட் மற்றும் ஓபெரா ப்ளூ ஆகிய ஆறு வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படும். சிறப்பு என்னவென்றால், டூயல்-டோன் விருப்பமானது அதன் அனைத்து வண்ண விருப்பங்களுடனும் கிடைக்கும்.
படங்களில், கர்வின் வடிவமைப்பு கூபே மற்றும் ஸ்லோப் டிசைனில் உள்ளது. இது ஃப்ளஷ் ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ், ஸ்குயர் வீல் அர்ச்செஸ், ட்வின்- ரியர் ஸ்பாய்லர், தடிமனான பிளாக் கிளாடிங், பனோரமிக் சன்ரூஃப், 18-இன்ச் அலோய் வீல்ஸ் மற்றும் கனெக்டெட் எல்இடி டெயில்லேம்ப்ஸ் போன்ற அம்சங்களுடன் வரும்.
கர்வ் டாடாவின் சிக்னேச்சர் ஃப்ரண்ட் ஃபேஷியாவை கொண்டிருக்கும், இதில் கனெக்டெட் எல்இடி டிஆர்எல்ஸ், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் குரோம் அலங்கரிக்கப்பட்ட ஸ்பிளிட் கிரில் ஆகியவை அடங்கும்.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், கர்வ் அதன் செக்மெண்ட்டில் மிகவும் அம்சம் நிறைந்த எஸ்யுவியாக இருக்கும். இது 12.3 இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட், டச் அடிப்படையிலான எச்விஏசி பேனல், இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய ட்வின்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் புதிய சென்டர் கன்சோல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது ஒரு பவர்ட் டிரைவர் சீட், ரியர் சீட்ஸ்க்கு டூ-ஸ்டெப் ரிக்லைனிங்க் ஃபங்ஷன், 360-டிகிரி கேமரா, லெவல் 2 ஏடாஸ் மற்றும் ஜெஸ்ச்சர் ஃபங்ஷன் கொண்ட பவர்ட் டெயில்கேட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, பாரத் என்கேப் கிராஷ் டெஸ்டில் டாடா கர்வ் ஃபைவ் ஸ்டார் ரேட்டிங்கை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜினைப் பொறுத்தவரை, டாடா கர்வ் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களில் வரும். 1.5-லிட்டர் டீசல் மற்றும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்கள் நெக்ஸானிலிருந்து பெறப்படுகின்றன, அதே நேரத்தில் புதிய 1.2-லிட்டர் டீஜிடிஐ இன்ஜின் கர்வ் உடன் அறிமுகமாகும். அனைத்து இன்ஜின்களும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிடீ கியர்பாக்ஸுடன் வழங்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்