- பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வேரியன்ட்ஸில் வழங்கப்படும்
- டாடாவின் முதல் கூபே எஸ்யுவி இதுவாகும்
இறுதியாக அறிமுகமானது!
டாடா கர்வ் ஐசிஇ அதன் கர்வ் இவி உடன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. இந்த கார் டி-செக்மெண்ட்க்குள் நுழைவு மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டிகுவான், ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற கார்ஸுடன் போட்டியிடும்.
டிசைன் சிறப்பம்சங்கள்
பெரிய பம்பர்ஸ், லோ சீட் ஹெட்லேம்ப்ஸ் மற்றும் புதிய புருவம் வடிவில் உள்ள எல்இடி இதன் சிறப்பம்சங்கள் ஆகும். சைடில் இருந்து, பாப்-அவுட் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் புதிய பெட்டல் டிசைன் அலோய் வீல்ஸ் ஆகியவற்றைக் காணலாம், அதே நேரத்தில் சி-பில்லர் தடிமனாகவும் ரியர் சாய்வாகவும் இருக்கும், டாடா வடிவமைப்பின் ஒரு பகுதியாக ரியர் ஸ்பாய்லரைச் சேர்த்துள்ளது. இறுதியாக, ரியரில், நீங்கள் ஒரு லைட் பார் மற்றும் பேக்கேஜின் ஒரு பகுதியாக தடிமனான ரியர் பம்பரைப் பெறுவீர்கள். ஒட்டுமொத்தமாக, டாடா 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய கான்செப்ட் காருக்கு உண்மையாக இருக்க முடிந்தது.
இன்டீரியர் மற்றும் அம்சங்கள்
கேபின் வெளியிடப்படவில்லை, ஆனால் நெக்ஸான் மற்றும் ஹேரியரில் உள்ள எலிமெண்ட்ஸை கர்வ் பயன்படுத்தும் என்பது எங்களுக்குத் தெரியும் (படம் குறிப்புகளாகப் பயன்படுத்தப்படுகிறது). லெவல்-2 ஏடாஸ், 360-டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேடெட் சீட்ஸ், பவர்ட் டிரைவர் சீட், டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன் மற்றும் பவர்ட் டெயில்கேட் போன்ற அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் விவரங்கள்
டாடா கர்வ் ஐசிஇ ஆனது 1.2 லிட்டர் ஜிடிஐ டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 123bhp/225Nm உற்பத்தி செய்யும் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது செவன்-ஸ்பீட் டிசிடீ உடன் இணைக்கப்படும். மறுபுறம் டாடாவின் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் 113bhp/260Nm உற்பத்தி செய்யும் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் எம்டீ அல்லது ஹேரியர்/சஃபாரியில் இருந்து சிக்ஸ்-ஸ்பீட் ஏடீ உடன் வழங்கப்படும்.
டாடா கர்வ் இவிக்கான விலைகள் ஆகஸ்ட் 7 அன்று அறிவிக்கப்படும், மேலும் நெக்ஸான் இவி மற்றும் நெக்ஸான் ஐசிஇ போன்றவற்றின் விலைகள் 10 நாட்களுக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்