- இதில் 1.5 லிட்டர் க்ரேல் டீசல் இன்ஜின் இருக்கும்
- பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 இல் வெளியிடப்படும்
பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2024 க்கு முன்னதாக டாடா மோட்டார்ஸ் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி கர்வ் இன்ஜின் மற்றும் அதன் அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் கர்வ் உட்பட அதன் தயாரிப்பு வரிசையின் விவரக்குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
இன்ஜின் மற்றும் பர்ஃபார்மன்ஸ்
டாடா கர்வ் நெக்ஸானின் ஐசிஇ வெர்ஷனின் அதே 1.5 லிட்டர், ஃபோர் சிலிண்டர் க்ரேல் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது 115bhp பவரையும் 260Nm டோர்க்கையும் உருவாக்கும். மேலும் இதன் இன்ஜின் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும்.
கர்வின் நீளம் மற்றும் அகலம்
கர்வ் 4308மிமீ நீளம், 1810மிமீ அகலம் மற்றும் 1630மிமீ உயரம், வீல்பேஸ் 2560மிமீ ஆகும். மேலும் இதற்கு 244 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
டாடா கர்வில் என்ன அம்சங்கள் கிடைக்கும்?
டாடா கர்வ் நெக்ஸானைப் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பெரிய பனரோமிக் சன்ரூஃப், நடுவில் இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வயர்லெஸ் சார்ஜிங் பேட், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் ப்ரீமியம் ஆடியோ சிஸ்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகளைப் பற்றி பேசுகையில், மொபிலிட்டி ஷோ 2024 இல் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் இந்தியா சிஎன்ஜி வேரியன்ட்டை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, இது பற்றிய தகவல்கள் ஏற்கனவே எங்கள் வெப்சைட்டில் உள்ளன.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்