- இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வழங்கப்படும்
- அதன் ஃப்ரண்ட் ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட் இருக்கும்
டாடா மோட்டார்ஸ் அதன் புதிய கூபே எஸ்யுவியை தயாரித்து வருகிறது, இது ஐசிஇ மற்றும் இவி ஆகிய இரண்டு வெர்ஷன்ஸிலும் வெளியிடப்படும். இந்த புதிய எஸ்யுவி 'கர்வ்' என்று அழைக்கப்படுகிறது மற்றும் ஆட்டோ எக்ஸ்போ மற்றும் பாரத் மொபிலிட்டி ஷோ உட்பட பல சந்தர்ப்பங்களில் வாகன உற்பத்தியாளரால் காட்சிப்படுத்தப்பட்டது. சமீபத்தில் கர்வ் லான்ச் டைம்லைன் பற்றி அறிந்தோம். கடந்த சில மாதங்களாக இது பலமுறை டெஸ்ட்டிங் செய்யப்பட்டு வருகிறது, இப்போது அதன் இவி மாடல் சமீபத்தில் சார்ஜிங் ஸ்டேஷனில் காணப்பட்டது.
படங்களில் காணக்கூடியது போல, இதன் மிகப்பெரிய மாற்றம் சார்ஜிங் போர்ட் ஆகும், இது பஞ்ச் இவி போன்ற ஃப்ரண்ட் ஃபெண்டரில் வைக்கப்பட்டுள்ளது. இது மோட்டார் பொருத்தப்பட்ட மடலைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும், ஃப்ரண்ட்டில், கர்வ் இவி ஆனது அகலமான பானட், ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஒரு முழு நீள எல்இடி லைட் பார் கொண்ட வெர்டிகல்லி ஸ்லாட்-வடிவமைக்கப்பட்ட லோயர் கிரில் ஆகியவற்றுடன் காணப்படுகிறது.
டாடாவிலிருந்து வரவிருக்கும் இந்த மாடலை வேறுபடுத்துவது அதன் கூபே போன்ற பாடி ஸ்டைல்தான். தற்போது, டாடாவைத் தவிர, மஹிந்திரா மற்றும் சிட்ரோன் நிறுவனங்களும் இதேபோன்ற பாடி ஸ்டைலில் வேலை செய்து வருகின்றன. கர்வ் இவி ஆனது லெவல் 2 ஏடாஸ், 360-டிகிரி சரவுண்ட் கேமரா, ப்ளைன்ட் ஸ்பாட்மானிட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலுக்கான ட்வின் 12.5-இன்ச் ஸ்கிரீன் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. இது தவிர, இதில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், இல்லுமினேட்டட் லோகோவுடன் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வயர்லெஸ் சார்ஜர், ஃப்ரண்ட்டில் பவர்ட் மற்றும் வென்டிலேடெட் சீட்ஸ் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
டாடாவின் நெக்ஸான் இவி ஆனது 40.5kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் பஞ்ச் இவி ஆனது 35kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் 465 கிமீ (நெக்ஸான் இவி LRக்கு) வரை டிரைவிங் ரேஞ்ச்சை வழங்குவதாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் கர்வ் இவி ஆனது நெக்ஸான் இவிக்கு மேலே நிலைநிறுத்தப்படும் என்று உங்களுக்குச் சொல்கிறோம், இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை செல்லும் பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்