- கர்வ் முதலில் இவி வேரியன்ட்டில் வெளியிடப்படும்
- இந்த செக்மென்ட்டின் முதல் கூபே எஸ்யுவி இதுவாகும்
சில மாதங்களாகவே, டாடா கர்வ் மாடல் தொடர்பான யூகங்கள், ஸ்பை ஷாட்ஸ் மற்றும் விளக்கக்காட்சிகள் இணையத்தில் நிறைந்துள்ளன. இருப்பினும், பல விளக்கங்களுக்குப் பிறகு, டாடா கர்வ் பற்றிய செய்தி இறுதியாக உண்மையாகிறது. ஆட்டோமேக்கர் வரவிருக்கும் கர்வ் கூபே எஸ்யுவியின் முதல் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளது. இது முதலில் இவி வெர்ஷனிலும், அதைத் தொடர்ந்து ஐசிஇ வெர்ஷன் கர்வ் மாடலிலும் வெளியிடப்பட உள்ளது.
டாடா கர்வ் இவி ஆனது கூபே பாடி ஸ்டைலுடன் கிரவுண்ட்-அப் அல்-எலக்ட்ரிக் மாடலாக வருகிறது. கர்வ் மாடலின் சில டிசைன் சிறப்பம்சங்கள், ரியரில் முழு அகல லைட் பார், ஸ்ப்ளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், ஆக்ரோஷமான தோற்றமுடைய கிரில் மற்றும் பம்பர், ஸ்லோப்பிங்க் ரூஃப், ஃப்ளஷ்-ஃபிட்டிங்க் டோர் ஹேண்டல்ஸ் மற்றும் கனெக்டெட் எல்இடி டெயில்லைட்ஸ் ஆகியவை அடங்கும். மேலும், காரின் ரியரில் உள்ள ரிஃப்ளெக்டர் டிசைன் மற்றும் பொஸிஷனிங் ஆகியவை நெக்ஸான் காரைப் போலவே இருக்கும்.
அம்சங்களைப் பொறுத்தவரை, கர்வ் இவி ஆனது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இல்லுமினேட்டட் டாடா லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங், டச்-அடிப்படையிலான எச்விஏசி கன்ட்ரோல், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ்,12-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுகிறது. ஆட்டோ-டிம்மிங்க் ஐஆர்விஎம், 360-டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் ஏடாஸ் டெக்னாலஜி போன்ற அற்புதமான அம்சங்களுடன் வருகிறது.
மேற்கூறிய அம்சங்களைத் தவிர, அதன் சமீபத்திய ஸ்பை ஷாட்ஸை பார்த்தால், கர்வ் இவி மாடலானது டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் உடன் வரும். மேலும், பேட்டரி பேக் மற்றும் விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, கர்வ் இவி நெக்ஸான் இவி பேட்டரி சிங்கிள் மோட்டர் அமைப்புடன் முன் சக்கரங்களுக்கு சக்தியை வழங்கும். மேலும், கர்வ் முதலில் வரும் பெரிய எஸ்யுவிகளில் ஒன்றாகும், மேலும் டாடா கர்வ் இவி ஆனது ஹூண்டாய் க்ரெட்டா இவி, கியா கேரன்ஸ் இவி, ஹோண்டா எலிவேட் இவி, மஹிந்திரா XUV.e8, மாருதி eVX மற்றும் டொயோட்டா அர்பன் ஸ்போர்ட் போன்றவற்றுக்கு போட்டியாகயிருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்