- இவி அறிமுகப்படுத்தப்பட்ட 3-4 மாதங்களுக்குள் ஐசிஇ வெர்ஷன் விற்பனைக்கு வரும்
- ப்ரொடக்ஷன் ரெடி கர்வ் ஐசிஇ பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது
இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கர்வ் வாகனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு காலவரிசையை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. வாகன உற்பத்தியாளரின் கூற்றுப்படி, இது இவி மற்றும் ஐசிஇ வெர்ஷனில் வெளியிடப்படும். டீசலில் இயங்கும் கர்வ் எஸ்யுவி, முதலில் இவி வெர்ஷனில் வெளியிடப்படும்.
டாடா கர்வ் இவி ஆனது FY2025 இன் இரண்டாம் காலாண்டில், அதாவது ஜூலை முதல் செப்டம்பர்-2024 வரை அறிமுகமாக உள்ளது. ஐசிஇ வெர்ஷன்னைப் பொறுத்தவரை, கர்வ் இவி அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று முதல் நான்கு மாதங்களுக்குப் பிறகு கார் தயாரிப்பாளர் அதை அறிமுகப்படுத்தும். இன்னும் சொல்லப்போனால், கர்வ் இவி மற்றும் ஐசிஇ அறிமுகத்திற்குப் பிறகு மூன்றாவது மாடலாக ஹேரியர் இவி அறிமுகப்படுத்தப்படும்.
இந்திய வாகன உற்பத்தியாளர் பல ஆண்டுகளாக கர்வ் இவி கான்செப்ட்டை பல்வேறு நேரங்களில் காட்சிப்படுத்தியுள்ளது. மொத்தத்தில், டாடா சமீபத்திய பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ-2024 இல் ப்ரொடக்ஷன் ரெடி கர்வ் ஐசிஇ யை காட்சிப்படுத்தியது. இந்த மாடலின் இன்ஜின் விவரக்குறிப்புகள் மற்றும் டிசைன் சிறப்பம்சங்கள் எங்களின் கார்வாலே வெப்சைட்டில் உள்ளது, முழுமையான தகவலுக்கு எங்கள் வெப்சைட்டில் பார்வையிடலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்