- இவி வெர்ஷன்க்குப் பிறகு ஐசிஇ வெர்ஷன் லான்சாகும்
- பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜிஸில் வழங்கப்படும்
டாடா மோட்டார்ஸ் தனது முதல் கூபே எஸ்யுவியை வரும் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கூபே எஸ்யுவி ஆனது கர்வ் என்று அழைக்கப்படும் மற்றும் ஐசிஇ மற்றும் இவி என இரண்டு வெர்ஷனில் வழங்கப்படும். இப்போது, கர்வ் இவியின் பேட்டரி பேக் மற்றும் டிரைவிங் ரேஞ்ச் பற்றிய பிரத்யேக தகவல்களுக்குப் பிறகு, ஐசிஇ கர்வின் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விருப்பங்களை வெளியிடுவதற்கான நேரம் இது.
இப்போது எங்களிடம் உள்ள தகவலின்படி, கர்வ் ஐசிஇ வெர்ஷன் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.2-லிட்டர் ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் (புதியது), மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் என வெர்ஷன் மூன்று இன்ஜின்ஸுடன் வழங்கப்படும். டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பொறுத்தவரை, மூன்று இன்ஜின்களும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிசிஏ (டிசிடீ) கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். மேலும், மற்ற டாடா எஸ்யுவிகளைப் போலவே, கர்வும் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவ் மோடுகளைப் பெறும்.
பவர் உற்பத்தியைப் பொறுத்தவரை, புதிய 1.2-லிட்டர் ஜிடிஐ மோட்டார் 123bhp மற்றும் 225Nm பீக் டோர்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. மற்ற டர்போ-பெட்ரோல் மோட்டாரைப் பொறுத்தவரை, இது நெக்ஸானிலிருந்து பெறப்பட்டது, இது 118bhp மற்றும் 170Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், டீசல் இன்ஜின் 113bhp மற்றும் 260Nm டோர்க்கை உருவாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்