- இது ஐசிஇ மற்றும் இவி எடிஷனில் வழங்கப்படும்
- இது 2024 இல் அறிமுகமாகும்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் க்ரெட்டா போட்டியாளரான கர்வ் எஸ்யுவியை சில மாதங்களாக நாட்டில் டெஸ்ட் செய்து வருகிறது. டெஸ்ட் மாடல் பல முறை சாலைகளில் காணப்பட்டு வருகிறது. முன்பு பார்த்த படங்களில், இந்த கூபே எஸ்யுவி ப்ரொடக்ஷன்-ரெடி அவதாரத்தில் காணப்பட்டது.
படத்தின்படி, டாடா கர்வ் முன்புறத்தில் கிரீஸுடன் உயர்த்தப்பட்ட போன்னெட், நெக்ஸான் இவி போன்ற ஃபுல்-லெந்த் எல்இடி டிஆர்எல்’ஸ், நீண்ட ஸ்லேட்ஸ் கொண்ட இரண்டு லேயர் கிரில் மற்றும் ஸ்ப்ளிட் ஹெட்லேம்ப் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
பக்கவாட்டில் தடிமனான வீல் அர்செஸ் கொண்ட 17-இன்ச் அலோய் வீல்ஸால் இணைக்கப்படும். அதன் கூபே போன்ற ரூஃப்லைன் பின்புறம் சாய்ந்துள்ளது. இது தவிர, ஏ-பில்லரில் இணைக்கப்பட்ட ஓஆர்விஎம், ஃப்ளஷ் டோர் ஹேண்டல்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் இன்டெக்ரேட்டட்எல்இடி டெயில் லேம்ப்ஸ் சீக்வென்ஷியல் ஃபங்ஷன் உடன் சேர்க்கப்பட்டுள்ளது
மற்ற டாடா மாடல்ஸைப் போலவே, கர்வ்வும் கவர்ச்சிகரமான இன்டீரியரை கொண்டிருக்கும். இதில் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இல்லுமினேட்டட் லோகோவுடன் கூடிய ட்வின்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கான பிசிக்கல் ஸ்விட்ச்ஸுடன் கூடிய எச்விஏசி பேனல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கூடுதலாக, வயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், ஃப்ரண்ட் வென்டிலேட்டட் சீட்ஸ், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், 360 டிகிரி சரவுண்ட் கேமரா மற்றும் சன்ரூஃப் ஆகியவை இதில் சேர்க்கப்படும்.
கர்வ் முதலில் இவி வெர்ஷனில் லான்ச் செய்யப்படும் மற்றும் அதன் ஐசிஇ வெர்ஷன் பின்னர் வெளியிடப்படும். இதனுடன், ஆட்டோ எக்ஸ்போவில் காட்டப்பட்ட புதிய பெட்ரோல் இன்ஜின் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் சேர்க்கப்படலாம். நெக்ஸான் மற்றும் ஹேரியர் எஸ்யுவிக்கு இடையேயான மாடலாக கர்வ் எஸ்யுவி இருக்கும். இது ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மாருதி சுஸுகிகிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்
சிறுபட ஆதாரம்: மோட்டார்பீம்