டாடா வாகனங்கள் அவற்றின் பாதுகாப்பு மற்றும் நல்ல அம்சங்களுக்காக அதிகம் பேசப்படுகின்றன. டாடா மோட்டார்ஸ் 2024 ஆம் ஆண்டிற்கான அதன் சில புதிய கார்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, இதில் சில எலக்ட்ரிக் கார்களும் அடங்கும். இந்த கட்டுரையில், இதுபோன்ற சில கார்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் இதில் வழங்கியுள்ளோம், அதன் லான்ச்க்கு நீங்கள் அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.
1. டாடா பஞ்ச் இவி
பஞ்சின் எலக்ட்ரிக் வெர்ஷன் டெஸ்ட்டிங்கில் பல முறை ஸ்பை செய்யப்பட்டது, அதன் இன்டீரியர் ஐசிஇ வெர்ஷன்னை விட சிறப்பாக உள்ளது. டாடா சமீபத்தில் நெக்ஸான் இவி’யை அறிமுகப்படுத்தியது மற்றும் நெக்ஸான் இவி’யின் சில அம்சங்களை பஞ்ச் இவி’யிலும் காணலாம்.
2. டாடா கர்வ்
கர்வ் கான்செப்ட்டின் வடிவமைப்பு ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் அதன் பெட்ரோல் வேரியன்ட் அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம். இதில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்கும். இந்த கார் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் எம்ஜி ஆஸ்டருடன் போட்டியிடும்
3. டாடா கர்வ் இவி
ஐசிஇ மற்றும் எலக்ட்ரிக் வெர்ஷனிலும் இது வழங்கப்படலாம். இந்த இவி ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது. ஐசிஇ வேரியன்ட்க்கு முன் எலக்ட்ரிக் வெர்ஷன்னை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. டாடா ஹேரியர் இவி
டாடா ஹேரியர் இவி’யின் வடிவமைப்பு புதிய ஹேரியர் ஐசிஇ மற்றும் சஃபாரி அடிப்படையாகக் கொண்டது, இது 2024 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படலாம். இது சுமார் 500 கி.மீ ரேஞ்ச் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மீடியம் மற்றும் லாங் ரேஞ்ச் ஆப்ஷனில் வழங்கப்படலாம்.
5. டாடா ஹேரியர் மற்றும் சஃபாரி பெட்ரோல்
டாடாவின் ஹேரியர் மற்றும் சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் பிராண்டின் புதிய டீஜிடிஐ ஃபோர்-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினைப் பெறலாம், இது 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த இன்ஜின் 168bhp பவரையும், 280Nm டோர்க்கையும் உருவாக்கும் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வழங்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்