- வேரியண்ட் ஆப்ஷனில் XE, XM, XM (S), மற்றும் T ஆகியவை அடங்கும்
- மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் 1.2 லிட்டர் பெட்ரோலுடன் மட்டுமே கிடைக்கும்
டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அல்ட்ரோஸ் XM மற்றும் XM (S) வேரியண்ட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலை ரூ.6.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). XE மற்றும் XM+ க்கு இடையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த வேரியண்ட்ஸ் புதிய அம்சங்களைப் பெறுகின்றது மற்றும் பெட்ரோல் மற்றும் மேனுவல் காம்பினேஷன்ஸுடன் வழங்கப்படுகின்றது.
அல்ட்ரோஸ் XM மற்றும் XM (S) ஃபீச்சர்ஸ்
அல்ட்ரோஸ் XM | அல்ட்ரோஸ் XM (S) |
ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்ஸ் | எலக்ட்ரிக் சன்ரூஃப் |
ஹைட்-அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட் | |
எலெக்ட்ரிக்கலி- அட்ஜஸ்ட்டெபல் மற்றும் ஃபோல்டபிள் ஓஆர்விஎம்ஸ் | |
16-இன்ச் வீல்ஸ் கவர்ஸ் உடன் |
XE, XM+, XM+ (S) மற்றும் XT இல் புதிய ஃபீச்சர்ஸ்
XE | XM+ and XM+ (S) | XT |
ரியர் பவர் விண்டோஸ் | ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா | ஹைட்-அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட் |
ரிமோட் கீலெஸ் என்ட்ரி | க்ரூஸ் கண்ட்ரோல் | ரியர் டிஃபாக்கர் |
ஹைட்-அட்ஜஸ்ட்டெபல் டிரைவர் சீட் | 16-இன்ச் வீல்ஸ் |
அல்ட்ரோஸ் XM மற்றும் XM (S) இன்ஜின் விவரங்கள்
இந்த இரண்டு வேரியண்ட்ஸும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும். இந்த மோட்டார் 87bhp மற்றும் 115Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், டிரான்ஸ்மிஷன் விருப்பத்தில், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸில் மட்டும் இருக்கும்.
டாடா அல்ட்ரோஸ் போட்டியாளர்கள்
டாடா அல்ட்ரோஸ்க்கு மாற்றாக மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் i20 ஆகியவை போட்டியிடும்.
டாடா அல்ட்ரோஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு.
வேரியண்ட்ஸ் | எக்ஸ்-ஷோரூம்விலை |
அல்ட்ரோஸ் XM | ரூ. 6.90 லட்சம் |
அல்ட்ரோஸ் XM (S) | ரூ. 7.35 லட்சம் |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்