- இந்தியாவில் ஆரம்பம் விலையாக ரூ. 6.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
- நான்கு இன்ஜின் விருபத்தில் வழங்கப்படுகின்றன
டாடா மோட்டார்ஸ் மொத்தமாக 10 மாடல்ஸ் அதாவது ஏழு ஐசிஇ வேரியண்ட் மற்றும் மூன்று எலக்ட்ரிக் வெர்ஷனை தனது வரிசையில் வைத்துள்ளது. இந்த பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் தற்போது உள்ள இரண்டு ஹேட்ச்பேக்ஸில் அல்ட்ரோஸ் ஒன்றாகும். ஃபைவ் சீட்டர் கொண்ட ஹேட்ச்பேக் மூன்று இன்ஜின் விருப்பங்களில் மற்றும் எட்டு வேரியண்ட்ஸில் வழங்கப்படுகிறது, இதன் விலை ரூ. 6,59,900 (எக்ஸ்-ஷோரூம்). தமிழ்நாட்டில் தற்போது அல்ட்ரோஸின் வெயிட்டிங் பீரியட்டை நாங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளோம்
செப்டம்பர் 2023 இல், அல்ட்ரோஸின் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்ஸை வாங்க திட்டமிடும் வாடிக்கையாளருக்கு அல்ட்ரோஸ் புக்கிங் செய்த நாளிலிருந்து மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும். மறுபுறம், டீசல் வேரியண்ட்டை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் கூடுதலாக இரண்டு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
டாடா அல்ட்ரோஸ் 1.2-லிட்டர் பெட்ரோல், 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல்-சிஎன்ஜி மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் விருபங்களில் கிடைக்கின்றன. ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் எல்லா வேரியண்ட்ஸ்க்கும் நிலையானது, சிக்ஸ்-ஸ்பீட் டிசிஏ டிரான்ஸ்மிஷன் 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் வெர்ஷன்க்கு மட்டுமே பொருதப்பட்டுள்ளது. அனைத்து இன்ஜின்ஸும் ஆர்டிஇ மற்றும் BS6 ஃபேஸ் 2எமிஷன் விதிமுறைக்கு இணங்க அப்டேட் செய்யபட்டுள்ளது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்