இந்திய பர்ஃபார்மன்ஸ் டர்போ கார்களின் உலகில் புதிதாக நுழைந்துள்ளது டாடா அல்ட்ராஸ் ரேசர். இது பிரீமியம் ஹேட்ச்பேக்கின் ஹை-பர்ஃபார்மன்ஸ் வெர்ஷன் மற்றும் அதன் பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு டாப்-ஸ்பெக் மாடலாகும். இதன் விலைகள் ரூ. 9.49 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன, மேலும் இது மூன்று வண்ண விருப்பங்கள் மற்றும் மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. இந்த டாடா தயாரிப்பு வலுவானதாகத் தெரிகிறது, ஆனால் இது ஹூண்டாய் i20N லைன் மற்றும் மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் டர்போ பெட்ரோல் போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டும்.
விலை
புதிய மாடல் அல்ட்ரோஸ் ரேசர், ஜூன் 2024 இல் இந்தியாவில் லான்ச் செய்தது. இது மூன்று வேரியன்ட்ஸில் கொண்டுள்ளது மற்றும் இதன் விலை ரூ. 9.49 லட்சம் முதல் ரூ. 10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். மாருதி ஃப்ரோன்க்ஸில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் நான்கு வேரியன்ட்ஸில் வருகிறது, இதன் விலை ரூ. 9.73 லட்சம் முதல் ரூ. 11.64 லட்சம் வரை உள்ளது. கடைசியாக, i20 N லைன் நான்கு வேரியன்ட்ஸில் கிடைக்கிறது மற்றும் அதன் விலைகள் ரூ. 9.99 லட்சம் முதல் ரூ. 11.42 லட்சம் வரை உள்ளது.
டிசைன் சிறப்பம்சங்கள்
மூன்று கார்களும் டூயல்-டோன் பெயிண்ட் ஸ்கீம் மற்றும் பேட்ஜிங்குடன் வருகின்றன. அல்ட்ரோஸ் எக்ஸ்டீரியரில் ஸ்ட்ரைப்ஸை கொண்டுள்ளது. அவற்றின் ஃப்ரண்ட் லூக் மற்றும் டிசைன் ஆகியவை அவற்றின் ஸ்டாண்டர்ட் மாடல்களிலிருந்து வேறுபடுகின்றன.
அல்ட்ரோஸின் வண்ண விருப்பங்கள் i20 ஐ விட பிரகாசமானவை, ஆனால் i20 அதிக டிசைன் எலிமெண்ட்ஸைக் கொண்டுள்ளது.
ஃப்ரோன்க்ஸ் அதிகமாக கிராஸ்ஓவர் போன்ற டிசைன் மற்றும் உயர்ந்த ஸ்டென்ஸ் உள்ளது.
இன்டீரியர்
மூன்று கார்களின் கேபின் லேஅவுட்டும் ஒரே மாதிரியாக உள்ளது. i20 N லைன் மற்றும் அல்ட்ரோஸ் ரேசருடன் ஒப்பிடும்போது, ஃப்ரோன்க்ஸ் ஒரு அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஃபுல் கலர் எம்ஐடி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மூன்று கார்களின் டைமென்ஷன் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை, i20 N லைன் மிக நீளமான வீல்பேஸைக் கொண்டுள்ளது, அதே சமயம் ஃப்ரோன்க்ஸ் எஸ்யுவி போன்ற 190mm கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.
அம்சங்கள்
அல்ட்ரோஸ் ரேசர், i20 N லைன் மற்றும் ஃப்ரோன்க்ஸ் டர்போ ஆகியவை 360 டிகிரி கேமரா, பெரிய டச்ஸ்கிரீன், தனிப்பயனாக்கக்கூடிய டிஜிட்டல் க்ளஸ்டர், சன்ரூஃப், கனெக்டெட் கார் டெக்னாலஜி மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களுடன் வருகின்றன. ரேசரில் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் i20 N லைனுடன் ஒப்பிடும்போது பெரிய டச்ஸ்கிரீன் உள்ளது, அதே சமயம் ஃப்ரோன்க்ஸில் எச்யுடி உள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, மூன்று கார்களிலும் ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஹைலைன் டீபீஎம்எஸ் ஆகியவை உள்ளன.
இன்ஜின்
அல்ட்ரோஸ் ரேசரில் நெக்ஸானிடமிருந்து பெறப்பட்ட 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் 118bhp/170Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் இன்ஜின் உள்ளது. அதுவே,i20 இன் 1.0-லிட்டர் த்ரீ சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது,118bhp/172Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது.
அதேசமயம் மாருதியின் ஃப்ரோன்க்ஸ்1.0-லிட்டர் டர்போ இன்ஜின் 99bhp/147Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது, இது மூன்றில் மிகக் குறைவானது. மூன்று கார்களும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸை பெறுகின்றன, ஆனால் i20 N லைன் செவன்-ஸ்பீட் டிசிடீ மற்றும் ஃப்ரோன்க்ஸ் சிக்ஸ்-ஸ்பீட் டோர்க் கன்வர்டர் ஏடீ டிரான்ஸ்மிஷனைப் பெறுகின்றன.
முடிவுரை
இந்த மூன்று கார்களுக்கு இடையிலான தேர்வு உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. அல்ட்ரோஸ் ரேசர் அதிக அம்சங்களை கொண்டுள்ளது. i20 N லைன் பர்ஃபார்மன்ஸில் முன்னணியில் உள்ளது. ஃப்ரோன்க்ஸ் என்பது மாருதியின் கார் ஆகும், இது எஸ்யுவி போல தோற்றமளிக்கும் மற்றும் அனைவருக்கும் பிடிக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்