அறிமுகம்
இந்திய ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் புதிய போட்டியாளர் வந்துள்ளார், அதாவது டாடா அல்ட்ரோஸ் ரேசர். இது ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் ஹை பர்ஃபார்மன்ஸ் வெர்ஷன் மற்றும் காரின் புதிய டாப்-ஸ்பெக் மாடலாகும். இதன் விலை ரூ 9.49 லட்சத்தில் தொடங்குகிறது, மேலும் இது மூன்று வண்ண விருப்பங்கள் மற்றும் மூன்று வேரியன்ட்ஸில் கிடைக்கிறது.
இந்த டாடா தயாரிப்பின் தோற்றம் மிகவும் சக்திவாய்ந்ததாகத் தெரிகிறது, ஆனால் அதன் போட்டி ஹூண்டாய் i20 என் லைனுடன் உள்ளது. இந்த கட்டுரையில், இந்த இரண்டு கார்களையும் ஒப்பிடப் போகிறோம், இது இரண்டிற்கும் இடையே சிறந்த மாடலை தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு உதவும்.
டிசைன் சிறப்பம்சங்கள்
இரண்டு கார்களின் வெளிப்புறமும் டூயல்-டோன் வண்ணம் மற்றும் பேட்ஜிங்கில் ஒரே மாதிரியாக உள்ளது, அதே சமயம் அல்ட்ரோஸ் ஒயிட் நிற ஸ்ட்ரைப்ஸ்ஸை பெற்றுள்ளது. அவற்றின் ஃப்ரண்ட் லூக் மற்றும் டிசைன் அதன் ஸ்டாண்டர்ட் வெர்ஷனைப் போலவே இருக்கும். அல்ட்ரோஸின் வண்ண விருப்பங்கள் i20 ஐ விட பிரகாசமாக உள்ளன, ஆனால் i20 கூடுதல் டிசைன் எலிமென்ட்ஸ்ஸை கொண்டுள்ளது, இது இன்னும் கொஞ்சம் வித்தியாசமானது.
அம்சங்கள்
இரண்டு கார்களும் 360 டிகிரி கேமரா, பெரிய டச்ஸ்கிரீன், கஸ்டமைஸ் டிஜிட்டல் க்ளஸ்டர், சன்ரூஃப், கனெக்டெட் கார் டெக்னாலஜி மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றை உள்ளடக்கிய ஃபுல்லி லோடெட் மாடல்கள் ஆகும். ஹூண்டாய் i20 என் லைனுடன் ஒப்பிடும்போது, ரேசருக்கு வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் பெரிய டச்ஸ்கிரீன் அமைப்பு உள்ளது. ஆறு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ட்ராக்ஷன் கன்ட்ரோல், நடுப் பின்பக்கத்தில் இருப்பவர்களுக்கான ஹெட்ரெஸ்ட் மற்றும் ஹைலைன் டீபீஎம்எஸ் ஆகிய இரண்டு கார்களும் பாதுகாப்பின் அடிப்படையில் சம அளவில் உள்ளன.
இன்ஜின் மற்றும் பர்ஃபார்மன்ஸ்
பர்ஃபார்மன்ஸ்க்கு வரும்போது அல்ட்ரோஸ் ரேசர் ஆனது 118bhp/170Nm உற்பத்தி செய்யும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஹூண்டாய் i20 என்-லைன் 1.0-லிட்டர் த்ரீ-பாட் டர்போ பெட்ரோல் இன்ஜினில் 118bhp/172Nm உற்பத்தி செய்கிறது. இரண்டுமே சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் வழங்கப்படுகின்றன, ஆனால் i20 என் லைன் செவன்-ஸ்பீட் டிசிடீஐயும் பெறுகிறது. இந்த அமைப்பு நெக்ஸான் உடன் கிடைக்கும் என்பதால் அல்ட்ரோஸ் ரேசர் ஆனது பின்னர் செவன்-ஸ்பீட் டிசிடீ ஐ பெறும் என எதிர்பார்க்கிறோம்.
விலை
அல்ட்ரோஸ் ரேஞ்சின் (எம்டீ) விலைகள் ரூ. 9.49 லட்சத்தில் தொடங்கி ரூ. 10.49 லட்சம் வரையிலும், i20 என் லைன் (எம்டீ) விலைகள் ரூ. 9.99 லட்சத்தில் தொடங்கி ரூ. 11.42 லட்சம் வரை (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம்). இரண்டு வேரியன்ட்ஸ்க்கு இடையே ரூ. 50,000 முதல் ரூ. 80,000 வரை வித்தியாசம் உள்ளது, இது எம்டீ வேரியன்ட்ஸ்க்கு மட்டுமே. செவன்-ஸ்பீட் டிசிடீக்கு வரும்போது அல்ட்ரோஸ் ரேசர் இதே போன்ற வேரியன்ட்டைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்