- மூன்று வேரியன்ட்ஸில் வழங்கப்படும்
- வரும் வாரங்களில் விலை அறிவிக்கப்படும்
டாடா மோட்டார்ஸ் இந்த மாதம் அல்ட்ரோஸ் ரேசர் எனப்படும் அல்ட்ரோஸின் பர்ஃபார்மன்ஸ் வெர்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. மேலும் அதிகாரப்பூர்வ விலை அறிவிப்புக்கு முன்னதாக, இந்த ஹேட்ச்பேக்கின் வேரியன்ட்ஸ், வண்ணங்கள் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் இன்டர்நெட்டில் லீக் ஆனது.
வரவிருக்கும் டாடா அல்ட்ரோஸ் ரேசர் ஆனது, R1, R2 மற்றும் R3 ஆகிய மூன்று வேரியன்ட்ஸில், ஆட்டோமிக் ஆரஞ்சு, அவென்யூ ஒயிட் மற்றும் ப்யூர் கிரே ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வழங்கப்படும். அல்ட்ரோஸ் ரேசர் ஆனது 1.2-லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினிலிருந்து சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 118bhp பவரையும் 170Nm டோர்க் திறனையும் உருவாக்கும்.
வரவிருக்கும் டாடா அல்ட்ரோஸ் ரேசரின் வேரியன்ட்ஸ் வாரியான அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
டாடா அல்ட்ரோஸ் ரேசர் R1 |
16-இன்ச் அலோய் வீல்ஸ் |
ஆறு ஏர்பேக்குகள் |
லெதர்ரெட் சீட்ஸ் |
10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் |
புஷ் ஸ்டார்ட் பட்டனுடன் கூடிய ஸ்மார்ட் கீ |
எல்இடி டிஆர்எல்கள் |
எட்டு ஸ்பீக்கர் |
ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் |
ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் |
ஃபாக் லைட்ஸ் |
ரியர் டிஃபாகர் |
பவர் விண்டோஸ் |
எலக்ட்ரிக்ள்ளி சரிசெய்யக்கூடிய மற்றும் ரிட்ராக்டெபல் ஓஆர்விஎம்கள் |
க்ரூஸ் கன்ட்ரோல் |
ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ் |
ரெயின் சென்சிங் வைப்பர் |
ரியர் ஏசி வென்ட்ஸ் |
ஸ்லைடிங் ஃபங்ஷனுடன் கூடிய லேதரால் மூடப்பட்ட ஃப்ரண்ட் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் |
லேதரால் மூடப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் கியர் கிநோப் |
நான்கு-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் |
ஆம்பியன்ட் லைட்டிங் |
டாடா அல்ட்ரோஸ் ரேசர் R2 |
வாய்ஸ் அசிஸ்டட் எலக்ட்ரிக் சன்ரூஃப் |
வயர்லெஸ் சார்ஜர் |
ஏழு இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் |
360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா |
ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர் |
எக்ஸ்பிரஸ் கூல் |
டாடா அல்ட்ரோஸ் ரேசர் R3 |
iRA-கனெக்டெட் கார் டெக்னாலஜி |
வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ் |
ஏர் ப்யூரிஃபையர் |
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்