- மூன்று வேரியன்ட்ஸில் வழங்கப்படும்
- மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே வழங்கப்படும்
டாடா மோட்டார்ஸ் இறுதியாக அதன் வரவிருக்கும் அல்ட்ரோஸ் ரேசரின் வெளியீட்டு தேதியை வெளியிட்டது. இந்த பர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக்கின் விலைகள் ஜூன் 7, 2024 அன்று வெளியிடப்படும். இந்த லான்ச்க்கு முன்னதாக, எங்களிடம் இதன் வேரியன்ட்ஸ், இன்ஜின், வண்ண விருப்பங்கள் மற்றும் அல்ட்ரோஸ் ரேசரின் அம்சங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.
ஹூண்டாய் i20 என்-லைன் உடன் போட்டியிடும் இந்த ஹேட்ச்பேக் R1, R2 மற்றும் R3 ஆகிய மூன்று வேரியன்ட்ஸில் விற்பனை செய்யப்படும். வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் ஆட்டோமிக் ஆரஞ்சு, அவென்யூ ஒயிட் மற்றும் ப்யூர் கிரே ஆகிய மூன்று வண்ணங்களிலிருந்து தேர்வு செய்யலாம். மேலும், ஆர்வமுள்ள வாடிக்கையாளர் டோக்கன் தொகையாக ரூ. 21,000 செலுத்தி இந்த மாடலை முன்பதிவு செய்யலாம்.
இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகளுக்கு வரும்போது, அல்ட்ரோஸ் ரேசர் நெக்ஸானிலிருந்து 1.2 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினை வாங்கும். இந்த இன்ஜின் 118bhp மற்றும் 170Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்யும் வகையில் டியூன் செய்யப்பட்டு, சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அல்ட்ரோஸ் ரேசர் ஆனது டிசிடீ கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்கிறோம்.
அம்சம் வாரியாக, அல்ட்ரோஸ் ரேசர் ஆனது பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் 360 டிகிரி சரவுண்ட் கேமரா, வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், ப்ளைன்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் எலக்ட்ரிகள்ளி சரிசெய்யக்கூடிய சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்படும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்