- டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் லான்ச் செய்யப்படும்
- ஜூன் இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும்
டாடா மோட்டார்ஸ் தனது அல்ட்ரோஸ் ரேசரை முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்துள்ளது. இந்த பர்ஃபார்மன்ஸ் ஹேட்ச்பேக் ஜூன் இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும். ஹூண்டாய் i20 என்-லைன் போட்டியாளரின் இன்ஜின் மற்றும் அம்சங்கள் உட்பட பல விவரங்களை நாங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இப்போது இந்த மாடலுக்கான முன்பதிவும் வரும் நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா அல்ட்ரோஸ் ரேசரின் மிகப்பெரிய மாற்றம் அதன் இன்ஜின் விருப்பங்கள் ஆகும். இந்த ஹேட்ச்பேக் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினுடன் வழங்கப்படும், இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும். இந்த இன்ஜின் 118bhp பவரையும், 170Nm டோர்க்கையும் உருவாக்கும், இது ஹூண்டாய் i20 என்-லைனின் 1.0 லிட்டர் டர்போ இன்ஜினுக்கு சமமானது.
இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 மற்றும் பாரத் மொபிலிட்டி ஷோ 2024 இல் காட்சிப்படுத்தப்பட்டது. அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது ஒரு பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட், பல டிரைவ் மோட்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஃப்ரண்ட் வென்டிலேட்டட் சீட் மற்றும் எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறும்.
ஸ்டாண்டர்ட் அல்ட்ரோஸிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள, ஹூட், ரூஃப், ஓஆர்விஎம்’ஸ், பில்லர் மற்றும் அலோய் வீல்ஸில் பிளாக் நிறத்தில் இருக்கும். இது தவிர, ரூஃப் மற்றும் ஹூடில் இரண்டு ஒயிட் ஸ்ட்ரிப்ஸ் இருக்கும், இது இந்த ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டி லூக்கை அதிகரிக்கும். வரவிருக்கும் அல்ட்ரோஸ் ரேசரின் கேபினில் ஒயிட் அக்ஸ்ன்ட்ஸுடன் பிளாக் மற்றும் ரெட் வண்ண தீம் இடம்பெறும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்