- இது ஹூண்டாய் i20 உடன் நேரடி போட்டியைக் கொண்டுள்ளது
- இது அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக்கின் ஸ்போர்ட்டி வெர்ஷனாகும்
டாடா மோட்டார்ஸ் வரும் மாதத்தில் அல்ட்ரோஸ் ரேசரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ஹூண்டாய் i20 N லைனின் வெற்றிக்குப் பிறகு, சந்தையில் ஸ்போர்ட்டி ஹேட்ச்பேக்குகளுக்கான தேவை அதிகம் என்பது தெளிவாகிறது. இது அல்ட்ரோஸின் வழக்கமான வெர்ஷனில் ஸ்போர்ட்டி வெர்ஷனாக இருக்கும், இது அடுத்த மாதம் அதாவது ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா அல்ட்ரோஸ் ரேசரின் எக்ஸ்டீரியர் எப்படி இருக்கும்?
டாடா அல்ட்ரோஸ் ரேசரில் ரேசிங் ஸ்ட்ரிப்ஸ் உட்பட சில எக்ஸ்டீரியர் காஸ்மெட்டிக் மாற்றங்களைப் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த காரின் எக்ஸ்டீரியரில் டூயல்-டோன் ஸ்போர்ட்டிரியர் உள்ளது. இது தவிர, இந்த ஹேட்ச்பேக்கில் பிளாக் அலோய் வீல்ஸ் இருக்கும், இது வழக்கமான வேரியண்டிலிருந்து வித்தியாசமான தோற்றத்தை கொடுக்கும்.
டாடா அல்ட்ரோஸ் ரேசரின் இன்டீரியர் எப்படி இருக்கும்?
இதன் டாஷ்போர்டு மற்றும் சீட் லேஅவுட் கிட்டத்தட்ட தற்போதைய அல்ட்ரோஸ் போலவே உள்ளது. இருப்பினும், அல்ட்ரோஸ் ரேசர் ஆனது புதிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தைப் பெறுகிறது, இது டாஷ்போர்டின் மேல் சென்டரில் வைக்கப்படும். கூடுதலாக, இது 360 டிகிரி கேமரா, வாய்ஸ் கமாண்ட் சன்ரூஃப் மற்றும் அல்ட்ரோஸின் டாப்-ஸ்பெக் வேரியன்ட் போன்ற ஃப்ரண்ட் வென்டிலேட்டட் சீட்ஸ் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பிற்காக, ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும்.
புதிய அல்ட்ரோஸ் ரேசரின் இன்ஜின் மற்றும் பர்ஃபார்மன்ஸ்
அல்ட்ரோஸ் ரேசர் ஆனது நெக்ஸானின் 1.2 லிட்டர் த்ரீ சிலிண்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இந்த இன்ஜின் 118bhp மற்றும் 170Nm டோர்க்கையும் உருவாக்குகிறது, இது தற்போதைய அல்ட்ரோஸ் ஐ விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பத்துடன் வழங்கப்படலாம்.
லான்ச் மற்றும் போட்டியாளர்
அல்ட்ரோஸ் ரேசர் முதன்முதலில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரத் மொபிலிட்டி ஷோவில் மீண்டும் ஒருமுறை காட்சிப்படுத்தப்பட்டது, இப்போது இறுதியாக அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது இந்திய சந்தையில் ஹூண்டாய் i20 உடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்