- ல்ட்ரோஸ் ரேசர் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது
- விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
டாடா மோட்டார்ஸ் அதன் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக்கின் ஸ்போர்டியர் வெர்ஷனை தொடர்ந்து சோதனை செய்து வருகிறது, இது விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இணையத்தில் பகிரப்பட்ட புதிய ஸ்பை ஷாட்ஸில், 2023 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலில் காட்சிப்படுத்தப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் அல்ட்ரோஸ் ரேசரைப் பாருங்கள்.
ஸ்பை ஷாட்ஸில் காணக்கூடியது போல், டாடா அல்ட்ரோஸ் ரேசரின் டெஸ்ட் மாடல் முற்றிலும் மறைக்கப்படவில்லை, கூரையைத் தவிர அனைத்து பகுதிகளையும் வெள்ளை நிற பாதுகாப்பு உறை உள்ளடக்கியது. இது ட்வின்-டிப் எக்ஸாஸ்ட் செட்-அப் கொண்டுள்ளது, இது ஸ்டாண்டர்ட் அல்ட்ரோஸிலிருந்து வேறுபடுத்துகிறது.
புதிய அல்ட்ரோஸ் ரேசர் ஆனது ஒரு பிளாக் பானட் மற்றும் நடுவில் இரண்டு ஒயிட் ஸ்ட்ரிப்ஸ் கொண்ட ரூஃப், புதிய அலோய் வீல்கள் மற்றும் 'ரேசர்' பேட்ஜிங் ஆகியவற்றை ஸ்டாண்டர்ட் வெர்ஷனிலிருந்து வேறுபடுத்துகிறது.
இன்டீரியரில், இந்த மாடலில் எலக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங், எச்யுடி, ஏழு இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, ஃப்ரண்ட் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் ரியர் ஏசி வென்ட்களில் 'ரேசர்' பேட்ஜிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 அல்ட்ரோஸ் ரேசர் ஆனது 118bhp மற்றும் 170Nm டோர்க்கையும் உருவாக்கும் 1.2-லிட்டர், டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பத்தேர்வுகளில் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்