- இந்தியாவில் அல்ட்ரோஸின் விலை ரூ. 6.60 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
- இந்த சலுகை டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்
டாடா மோட்டார்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப்ஸில் இந்த ஆண்டின் இறுதியில் தங்கள் அனைத்து மாடல்களுக்கும் பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன. இந்த நன்மைகள் கேஷ் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் கிடைக்கும்.
டாடா அல்ட்ரோஸின் பெட்ரோல் வேரியன்ட்டில் ரூ. 30,000 கேஷ் தள்ளுபடி, ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 5,000 கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதுவே டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் (டிசிஏ) வேரியன்ட்டில் ரூ. 15,000 கேஷ் தள்ளுபடி, ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 5,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவை வழங்கபடுகின்றன.
இது தவிர, டாடா அல்ட்ரோஸ் டீசல் வேரியன்ட்டில் ரூ. 25,000 கேஷ் தள்ளுபடி, ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 5,000 கார்ப்பரேட் தள்ளுபடி கிடைக்கும். மறுபுறம், சிஎன்ஜி வேரியன்ட்க்கு ரூ. 10,000 கேஷ் தள்ளுபடி மற்றும் ரூ. 5,000 கார்ப்பரேட் தள்ளுபடியுடன் சமமான எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
அல்ட்ரோஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் ஏழு வண்ண விருப்பங்களுடன் ஒன்பது வேரியன்ட்ஸில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின்,1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் கொண்ட சிஎன்ஜி வேரியன்ட்டில் வாங்கலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்