- இந்தியாவில் அல்ட்ரோஸின் ஆரம்ப விலை ரூ.6.60 லட்சம்
- சன்ரூஃப் இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்ஸில் கிடைக்கும்
டாடா அல்ட்ரோஸ் புதிய வேரியண்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ் இந்த மாத தொடக்கத்தில் மாடலின் சிஎன்ஜி வெர்ஷன்ஸை அறிமுகப்படுத்திய சில நேரத்திலேயே அல்ட்ரோஸ் ரேஞ்சில் புதிய வேரியண்ட்ஸுடன் அப்டேட் செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஆல்ட்ரோஸின் புதிய வகைகளில் டாடா வேலை செய்து வருவதாக சில வாரங்களுக்கு முன்பு தெரியவந்தது.
டாடா அல்ட்ரோஸ் அனைத்து வெர்ஷன்ஸிலும் சன்ரூஃப் கிடைக்கும்
அல்ட்ரோஸ் இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் வெர்ஷன்ஸில் 13 புதிய வேரியண்ட்ஸைப் பெறுகிறது. இதில் பெட்ரோல் ரேஞ்சில் XM ப்ளஸ் (S), XMA ப்ளஸ் (S), XZ ப்ளஸ் (S), XZ ப்ளஸ் (S) டார்க், XZ ப்ளஸ் (O) (S), XZA ப்ளஸ் (S), XZA ப்ளஸ் (S) டார்க், XZA ப்ளஸ் (O) (S), XZ ப்ளஸ் ஐ-டர்போ (S), மற்றும் XZ ப்ளஸ் ஐ-டர்போ (S) டார்க் ஆகியவை அடங்கும் மற்றும் டீசல் ரேஞ்சில் XM ப்ளஸ் (S), XZ ப்ளஸ் (S), மற்றும் XZ ப்ளஸ் (S) டார்க் ஆகியவை அடங்கும்.
டாடா அல்ட்ரோஸின் புதிய கூடுதல் அம்சம்
அல்ட்ரோஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் பெட்ரோல் மற்றும் டீசல் வரிசையின் தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்ஸில் எலக்ட்ரிக் சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவற்றைப் பெறுகின்றது. மாடலுடன் வழங்கப்படும் மற்ற அனைத்து அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.
அல்ட்ரோஸ் இன்ஜின் மற்றும் விவரக்குறிப்புகள்
டாடா அல்ட்ரோஸ் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரெடெட் பெட்ரோல் மோட்டார், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மில் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்ஆகியவற்றைப் பெறுகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்கள் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் யூனிட் மற்றும் டிசிஏ யூனிட்டில் மட்டும் கிடைக்கும். மேலும் இதில் சிஎன்ஜி வெர்ஷனும் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் புதிய வேரியண்டின் விலை
புதிய டாடா அல்ட்ரோஸ் வேரியண்ட்ஸின் மாறுபாடு வாரியான விலைகள் (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்):
வேரியண்ட் | விலை |
XM ப்ளஸ் (S) பெட்ரோல் | ரூ. 7.89 லட்சம் |
XMA ப்ளஸ் (S) பெட்ரோல் | ரூ. 9 லட்சம் |
XZ ப்ளஸ் (S) பெட்ரோல் | ரூ. 9.04 லட்சம் |
XZ ப்ளஸ் (S) டார்க் பெட்ரோல் | ரூ. 9.44 லட்சம் |
XZ ப்ளஸ் (O) (S) பெட்ரோல் | ரூ. 9.56 லட்சம் |
XZA ப்ளஸ் (S) பெட்ரோல் | ரூ. 10 லட்சம் |
XZA ப்ளஸ் (S) Dark பெட்ரோல் | ரூ. 10.24 லட்சம் |
XZA ப்ளஸ் (O) (S)பெட்ரோல் | ரூ. 10.56 லட்சம் |
XZ ப்ளஸ் ஐ-டர்போ (S) பெட்ரோல் | ரூ. 9.64 லட்சம் |
XZ ப்ளஸ் ஐ-டர்போ (S) டார்க் பெட்ரோல் | ரூ. 10 லட்சம் |
XM ப்ளஸ் (S) டீசல் | ரூ. 9.25 லட்சம் |
XZ ப்ளஸ் (S) டீசல் | ரூ. 10.39 லட்சம் |
XZ ப்ளஸ் (S) டார்க் டீசல் | ரூ. 10.74 லட்சம் |
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்