- 72bhp மற்றும் 103Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது
- ஆறு வேரியண்ட்ஸில் மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது
சில மாதங்களுக்கு முன்பு, டாடா மோட்டார்ஸ் அல்ட்ரோஸ் சிஎன்ஜியை ரூ.7.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த, சிஎன்ஜி அல்ட்ரோஸ், ஒரு கிலோவுக்கு 26.2 கி.மீ மைலேஜ் என ஏஆர்ஏஐ-சான்றளிக்கப்பட்ட மைலேஜைக் கொண்டுள்ளது என்பதை வாகன உற்பத்தியாளர் வெளிப்படுத்தியுள்ளார்.
அல்ட்ரோஸ் சிஎன்ஜி இன்ஜின் விவரங்கள்
பஞ்ச் சிஎன்ஜி 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மோட்டார் சிஎன்ஜியில் 72bhp மற்றும் 103Nm டோர்க்கை வெளியிடுகிறது. மேலும் இந்த இன்ஜின் ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அல்ட்ரோஸ் சிஎன்ஜி வேரியண்ட்ஸ்
அல்ட்ரோஸின் சிஎன்ஜி வெர்ஷன் XE, XM+, XM+ (S), XZ, XZ+ (S) மற்றும் XZ+ O (S) ஆகியவற்றில் கிடைக்கும். ஸ்டாண்டர்ட் அம்சங்களுடன் கூடுதலாக, அல்ட்ரோஸ் சிஎன்ஜி ஒரு எலக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்ரை பெற்றுள்ளது
டாடா சிஎன்ஜி மாடல்ஸ்
அல்ட்ரோஸ் சிஎன்ஜி தவிர, கார் தயாரிப்பாளரின் மற்ற மூன்று மாடல்ஸும் சிஎன்ஜி வேரியண்ட்ஸுடன் வழங்கப்படுகின்றன. இதில் டியாகோ சிஎன்ஜி, டிகோர் சிஎன்ஜி மற்றும் பஞ்ச் சிஎன்ஜி ஆகியவை அடங்கும். அனைத்து மாடல்ஸும் பிராண்டின் ட்வின்-சிலிண்டர் டெக்னாலஜியுடன் பொருத்தப்பட்டுள்ளன.
மொழிபெயர்த்தவர் : பவித்ரா மதியழகன்