டாடா அல்ட்ரோஸின் சிஎன்ஜி வெர்ஷன் இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 7.55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என விற்பனை செய்யப்படுகிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. சுவாரஸ்யமாக, அல்ட்ரோஸ் ஐ-சிஎன்ஜி ஆனது சிஎன்ஜி கிட் மூலம் பல புதிய அம்சங்களைப் பெறுகிறது. இந்த காரைப் பற்றிய மூன்று சிறப்பு விஷயங்கள் கீழே உள்ளன.
1. ட்வின் சிலிண்டர் இருப்பதால் அதிக பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது
டாடா மோட்டார்ஸ் பூட் ஸ்பேஸில் 30 லிட்டர், இரண்டு சிஎன்ஜி டேங்க்ஸை வழங்கியுள்ளது. 210 லிட்டர் இடம் சாமான்களை சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
2. டைரக்ட் சிஎன்ஜி ஸ்டார்ட்
பல சிஎன்ஜி வெர்ஷன் முதலில் பெட்ரோல் மோடில் தொடங்கிய பிறகு சிஎன்ஜிக்கு மாறுகின்றன. அல்ட்ரோஸை நேரடியாக சிஎன்ஜி மோடில் தொடங்கலாம் மற்றும் அதை மாற்ற உள்ளே ஒரு பட்டனும் உள்ளது.
3. பல வேரியண்ட்ஸ் மற்றும் புதிய எக்யூப்மென்ட்
அல்ட்ரோஸ் ஐ-சிஎன்ஜி ஆறு வேரியண்ட்ஸிலும் மற்றும் டாப் வெர்ஷனிலும் வழங்கப்படுகிறது. இதில் சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற இந்த செக்மெண்ட்டில் முதல் அம்சங்களையும் பெறுகிறது. வாடிக்கையாளர்கள் வெவ்வேறு விலை பாயிண்ட்ஸில் தேர்வு செய்ய பல விருப்பங்களைப் பெறுகிறார்கள்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்