- இந்த மாத இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- ஆறு வேரியண்ட்ஸில் வழங்கப்படும்
கடந்த மாதம், டாடா மோட்டார்ஸ் அல்ட்ரோஸ் சிஎன்ஜிக்கான முன்பதிவுகளை ரூ.21,000க்கு தொடங்கியது. சிஎன்ஜி ஹேட்ச்பேக் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மற்றும் விலை அறிவிப்புக்கு முன்னதாக, இந்த மாடல் நாடு முழுவதும் உள்ள டீலர்ஷிப்ஸை சென்றடையத் தொடங்கியுள்ளது.
அல்ட்ரோஸ் சிஎன்ஜி ஆனது XM+ (S), XZ+ (S) மற்றும் XZ+ O (S) ஆகிய ஆறு வேரியண்ட்ஸில் வழங்கப்படும். இதில், XM+ (S), XZ+ (S) மற்றும் XZ+ O (S) வேரியண்ட்ஸில் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஃபங்ஷனுடன் எலக்ட்ரிகள்ளி அட்ஜஸ்டெபிள் சன்ரூஃப் உடன் கிடைக்கும்.
அல்ட்ரோஸ் சிஎன்ஜியில் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல், ஆறு ஏர்பேக்ஸ், ஸ்டீயரிங் கண்ட்ரோல்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பின்புற ஏசி வென்ட்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இது தவிர, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்புடன் கூடிய ஏழு இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், நான்கு இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களையும் இது பெறும்.
இது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ட்வின் சிலிண்டர் சிஎன்ஜி கிட் மூலம் இயக்கப்படும், இது 85bhp மற்றும் 113Nm டோர்க்கையும் உருவாக்கும். சிஎன்ஜி மோட்டில், இந்த இன்ஜின் 76 bhp மற்றும் 97Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. இது ஃபைவ் ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்டதும், அல்ட்ரோஸ் சிஎன்ஜி மாருதி சுஸுகி பலேனோ சிஎன்ஜி மற்றும் டொயோட்டா க்ளான்ஸா சிஎன்ஜி ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்