- டாடா அல்ட்ரோஸ் புதிய வேரியண்ட்ஸுடன் அப்டேட் செய்யப்பட்டது
- என்ட்ரி லெவல் வேரியண்ட்ஸில் கூடுதல் அம்சங்களைப் பெறுகின்றன
2023 டாடா அல்ட்ரோஸ் புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அல்ட்ரோஸின் இரண்டு புதிய மிட்-ஸ்பெக் வேரியண்ட்ஸை அறிமுகப்படுத்தியது. இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் இப்போது XM வேரியண்ட்டில் ரூ.6.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) மற்றும் XM(S) ட்ரிம்ஸின் விலை ரூ.7.35 லட்சம். இந்த என்ட்ரி லெவல் டிரிம்ஸ் கூடுதல் அம்சங்களைப் பெறுகின்றன.
டாடா அல்ட்ரோஸின் புதிய மிட்-ஸ்பெக் XM மற்றும் XM(S) வேரியண்ட்ஸ்
கார் தயாரிப்பாளர் புதிய XM மற்றும் XM(S) வேரியண்ட்ஸை XE மற்றும் XM+ ட்ரிம்ஸின் இடையே அடங்கும். XM வேரியண்ட்டில் டிரைவர் சீட் உயரம் சரிசெய்தல், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்ஸ், எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டெபல் மற்றும் ஃபோல்டபிள்ஓஆர்விஎம்’எஸ் மற்றும் 16-இன்ச் வீல் கவர்ஸ் ஆகியவை உள்ளன. மறுபுறம், XM(S) வேரியண்ட்டில் அதே அம்சங்கள் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது.
டாடா அல்ட்ரோஸ் பேஸ் வேரியண்ட்டின் புதிய ஃபீச்சர்ஸ்
டாடா மோட்டார்ஸ் செய்த மற்றொரு அறிவிப்பு அல்ட்ரோஸின் பெட்ரோல் மேனுவல் பதிப்புகளுக்கானது. இதில் ரியர் பவர் விண்டோஸ் மற்றும் ரிமோட் கீலெஸ் என்ட்ரியுடன் ஸ்டாண்டர்ட் ஃபீச்சர்ஸாக வரும். பின்னர், என்ட்ரி லெவல் XE ட்ரிம் ஃபொலொ-மி-ஹோம் ஹெட்லேம்ப்ஸை பெறுகிறது. மேலும், XM+ மற்றும் XM+S ட்ரிம்ஸில் ரிவர்ஸ் கேமரா, டிரைவர் சீட் உயரம் சரிசெய்தல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகியவற்றை பெறும். கூடுதலாக, XT ட்ரிம் இப்போது உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவர் சீட், ரியர் டிஃபாக்கர் மற்றும் 16-இன்ச் ஹைப்பர் ஸ்டைல் வீல்ஸை கொண்டிருக்கும்.
2023 டாடா அல்ட்ரோஸ் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் விருப்பங்கள்
டாடா அல்ட்ரோஸ்1.2லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் கிடைக்கும். இந்த மோட்டார் 87bhp மற்றும்115Nm பீக் டோர்க்கை உற்பத்தி செய்யும் மற்றும் இது 1.5 லிட்டர் டீசல் 89bhp and 200Nm டோர்க்கை உற்பத்தி செய்யும் இதற்கிடையில், டிரான்ஸ்மிஷனில், ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும். இந்த ஹேட்ச்பேக் சிஎன்ஜி வெர்ஷனிலும் பெறலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்