- இது எஸ்-பிரஸ்ஸோவை விட சிறியதாக இருக்கும்
- இது ஆல்-வீல் டிரைவ் (AWD) ஆப்ஷனையும் கொண்டுள்ளது
சுஸுகியின் சிறிய மற்றும் பாக்ஸி வடிவமைக்கப்பட்ட ஹஸ்ட்லர் மைக்ரோ எஸ்யுவி இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் புது டெல்லிக்கு அருகே சோதனையின் போது காணப்பட்டது.
ஹஸ்ட்லர் 3.3 மீட்டர் நீளம் மற்றும் 2.40 மீட்டர் வீல்பேஸ் கொண்டது, இது எம்ஜி காமெட் மற்றும் மாருதி ஆல்டோ போன்ற கார்களைப் போலவே இருக்கும். இது சுஸுகியின் 660cc இன்ஜினைக் கொண்டுள்ளது, இது நோன்-டர்போ வெர்ஷனில் 48bhp பவரையும், டர்போசார்ஜ்ட் வெர்ஷனில் 64bhp பவரையும் வழங்குகிறது. கியர்பாக்ஸிற்கு, இது சிவிடீ ஐ பெறுகிறது மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) விருப்பமும் கிடைக்கிறது.
ஹஸ்ட்லரின் டிசைன் உள்ளேயும் வெளியேயும் முற்றிலும் பாக்ஸியாக உள்ளது. இந்த வாகனம் உயரத்தில் மிகவும் உயரமானது மற்றும் நீங்கள் கவனமாகப் பார்த்தால், இது ஜிம்னி மற்றும் எஸ்-பிரஸ்ஸோ மைக்ரோ எஸ்யுவியின் கலவையாகத் தெரிகிறது.
ஹஸ்ட்லரின் சைஸ், இன்ஜின் மற்றும் டிசைனைப் பார்க்கும்போது, அதை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது கடினம் என்று தோன்றுகிறது. ஆனால் இது அறிமுகப்படுத்தப்பட்டால், இது கிட்டத்தட்ட எஸ்-பிரஸ்ஸோவின் விலை ரேஞ்சில் வழங்கப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்