- 2024 இறுதிக்குள் ப்ரொடக்ஷன் தொடங்கும்
- இது 500 கிமீ டிரைவிங் ரேஞ்சை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஹூண்டாய் க்ரெட்டா இந்தியாவில் கொரிய வாகன உற்பத்தியாளரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பிரபலமான மாடல் என்பதில் சந்தேகமில்லை. அதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் லான்ச்க்கு பிறகு, ஹூண்டாய் இந்த மிட்-சைஸ் எஸ்யுவியின் என்-லைன் வெர்ஷனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது நாம் ஏற்கனவே அறிந்தபடி, க்ரெட்டாவின் எலக்ட்ரிக் வெர்ஷன் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாடல் உற்பத்திக்கு தயாராக உள்ள அவதாரத்தில் டெஸ்ட்டிங் செய்யப்பட்டது.
படங்களில் இருந்து பார்க்க முடிந்தால், க்ரெட்டா இவி ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டா எஸ்யுவியை அடிப்படையாகக் கொண்டது. ஐசிஇ வெர்ஷன்னைப் போலவே, எல்இடி டிஆர்எல்களை இணைக்கும் லைட் பார், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப்ஸ், கனெக்டெட் எல்இடி டெயில்லேம்ப்ஸ், ரூஃப்-ரெயில்ஸ் மற்றும் இன்டெக்ரேட்டட் ஸ்டாப் லேம்புடன் ரியர் ஸ்பாய்லர் வழங்கப்படலாம். இது தவிர, க்ரெட்டா இவி ஆனது ஏரோ-டிசைன் அலோய் வீல்ஸைப் பெறும், இது ஒரு எலக்ட்ரிக் வெர்ஷன் என்பதைக் காட்டுகிறது.
ஸ்பை படங்களில், ஃப்ரண்ட்டில் ஒரு இன்டெக்ரேட்டட் ஃப்ரண்ட் கேமராவுடன் பிளாக்-ஆஃப் கிரில்லைக் காட்டுகிறது. அதன் பம்பரில் ஒரு சென்சார் நிறுவப்பட்டுள்ளது, அதில் ஏடாஸ் இருப்பதைக் குறிக்கிறது. கூடுதலாக, ஃப்ரண்ட் ஃபெண்டரில் பொருத்தப்பட்ட சார்ஜிங் போர்ட்டை மறைக்க ஒரு பெரிய கருப்பு துணி உள்ளது. க்ரெட்டா இவியின் முந்தைய ஸ்பை படங்களிலும் இது உறுதிப்படுத்தப்பட்டது.
அம்சங்களைப் பற்றி பேசுகையில், க்ரெட்டா இவி ஐசிஇ வெர்ஷனில் உள்ள அதே அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் ஆகியவற்றுக்கான ட்வின் டிஸ்ப்ளே, வென்டிலேடெட் மற்றும் பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம், ரியர் ஏர் வென்ட்ஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது அதன் பேட்டரி பேக் மற்றும் மற்ற விவரங்கள் பற்றி பேசுகையில், ஹூண்டாய் க்ரெட்டா இவி ஆனது ஃபுளோர் மவுண்ட்டெட் 50-60kWh பேட்டரி யூனிட்டுடன் வழங்கப்படும், இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை டிரைவிங் ரேஞ்சை வழங்கும். இது தவிர, இது வேரியன்ட்டைப் பொறுத்து வெவ்வேறு பேட்டரி பேக் மற்றும் டிரைவிங் ரேஞ்ச் விருப்பங்களுடன் வரக்கூடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்