- அதன் ப்ரொடக்ஷன் மடல் அடுத்த ஆண்டு லான்ச் செய்யப்படலாம்
- இது MEB பிளாட்ஃபார்மில் அமைக்கப்படும்
இந்த கார் 2023 ஆம் ஆண்டில் எல்ராக் கான்செப்டாக காட்சிப்படுத்தப்பட்டது, இப்போது அதன் தயாரிப்பு மாடல் நர்பர்க்ரிங்கில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனை மாடலின் படங்கள் ஸ்பிளிட் ஹெட்லேம்ப்ஸ், ஃபாக்ஸ் கிரில் மற்றும் வெர்டிகல் ஏர் கர்டென்ஸ் போன்ற ப்ரோட்டோடைப் அம்சங்களைக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.
இதன் எக்ஸ்டீரியரில் வீல் அர்ச்செஸ் மற்றும் ஸ்லோப்பிங்க் விண்ட்ஷீல்ட் உள்ளது. அதன் முந்தைய படங்கள் ஸ்கோடாவின் சிக்னேச்சர் டெயில் லைட்ஸ் மற்றும் ஸ்கோடா லோகோவைக் காட்டியது, இது அனைத்து ஸ்கோடா வாகனங்களிலும் நிலையானது.
இந்த ஆதாரங்களின்படி, இன்டீரியரில் டூயல் டிஜிட்டல் ஸ்கிரீன்ஸ் மற்றும் ஒரு எளிய கேபின் உள்ளது, இது கடந்த ஆண்டு கான்செப்ட் காரில் காட்டப்பட்டது. குஷாக்கை விட எல்ராக் 4.5 மிமீ நீளம் கொண்டதாக இருக்கும் என்று ஸ்கோடா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது MEB பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படும் மற்றும் அதன் ப்ரீமியம் எலக்ட்ரிக் மாடல்களான இன்யாக் மற்றும் வரவிருக்கும் சூப்பர்ப் இவி உடன் சில எலிமெண்ட்ஸை பகிர்ந்து கொள்ளும். இது 62kWh பேட்டரி பேக் மற்றும் ரியரில் பொருத்தப்பட்ட மோட்டார் ஆகியவற்றைப் பெறலாம், இது சுமார் 177bhp ஆற்றலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஷாக் மற்றும் ஸ்லாவியா மாடல்களில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பது பற்றிய குறிப்பைக் கொடுப்பதால், இந்த கார் எங்களுக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது, மேலும் ஸ்கோடாவிடமிருந்து ஒரு ஸ்பெஷல் இவி 2027 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம். இந்த கார் மாருதி eVX, டொயோட்டா அர்பன் ஸ்போர்ட், ஹோண்டா எலிவேட் இவி, ஹூண்டாய் க்ரெட்டா இவி, கியா கேரன்ஸ் இவி மற்றும் மஹிந்திரா மற்றும் டாடாவின் மாடல்களுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்