- MQB-A0-IN பிளாட்ஃபார்மில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கார்கள் தயாரித்தது
- மொத்த ஏற்றுமதியில் மேட்-இன்-இந்தியாவின் பங்களிப்பு 30 சதவீதம்
ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வேகன் இந்தியா 2009 ஆம் ஆண்டு முதல் அதன் சக்கான், புனே ஆலையில் 15 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை உற்பத்தி செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. ஸ்கோடா ஃபேபியா, ஸ்கோடா ரேபிட், ஃபோக்ஸ்வேகன் போலோ, ஃபோக்ஸ்வேகன் வென்டோ மற்றும் எம்க்யூபி பிளாட்ஃபார்ம் அடிப்படையாகக் கொண்ட புதிய மாடல்கள் உட்பட பல மாடல்கள் இந்த ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டன.
தற்போது, MQB-A0-IN பிளாட்ஃபார்மில் ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா மற்றும் வோக்ஸ்வாகன் வர்டஸ் மற்றும் டைகுன் உள்ளிட்ட பல மாடல்ஸ் உள்ளன. இந்த மாடல்களின் உற்பத்தி இந்த சாதனையை எட்டுவதற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை வழங்கியுள்ளது. இது தவிர, மிகவும் பிரபலமான 1.0 லிட்டர் டீஎஸ்ஐ இன்ஜின் உட்பட 3.8 லட்சம் இன்ஜின்களையும் சக்கான் ஆலை தயாரித்துள்ளது.
கூடுதலாக, ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் 30 சதவீதத்தை 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது, இதனால் இந்தியாவை உலகளவில் நான்காவது பெரிய ஏற்றுமதி மையமாக மாற்றியுள்ளது.
இந்த நிகழ்வில், SAVWIPL இன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பியூஷ் அரோரா, “எங்கள் சக்கான் ஆலையில் நாங்கள் 15 லட்சம் வாகனங்களைத் தயாரித்துள்ளோம், மேலும் நான்கு வெற்றிகரமான எம்க்யூபி மாடல்களைத் தயாரித்து புதிய சாதனையையும் படைத்துள்ளோம்” என்றார்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்