- 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகலாம்
- இதில் 1.0 லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஸ்கோடா அதன் சப்-ஃபோர் மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவிக்கான இரண்டாவது டீசரை வெளியிட்டுள்ளது மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. படத்தில், டெயில்லேம்ப்ஸ் டிசைன், தடிமனான ரியர் பம்பர், ஸ்லோபிங்க் கிளாஸ் ஹவுசிங் காணப்படுகிறது. ரூஃப் ரெயில்ஸ் இங்கே தெரியும் மற்றும் ஸ்கோடா எழுத்துகளும் பூட் கதவின் நடுவில் தெரியும்.
இந்த டீஸர் கான்செப்ட் காரின் படம் என்று நம்புகிறோம், ஸ்பை படங்களின்படி, ப்ரொடக்ஷன் ரெடி மாடல் குஷாக் எஸ்யுவி போல இருக்கும். உண்மையில், ஸ்பை படங்களில், சி-பில்லர் வரை இந்த புதிய வாகனத்தின் வடிவம் குஷாக்கைப் போலவே உள்ளது. ஆனால் திரும்பிப் பார்த்தால், நீளம் இல்லாதது இது ஒரு எஸ்யுவி என்று சாட்சியமளிக்கிறது.
இது ஸ்கோடாவின் 2.0 திட்டத்தின் கீழ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாகும். இது நிறுவனத்தின் மிக முக்கியமான துவக்கமாக இருக்கும், ஏனெனில் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 2030 ஆம் ஆண்டளவில் இந்திய சந்தையில் அவர்களின் பங்கை ஐந்து சதவீதமாக அதிகரிக்கும். இருப்பினும், இது நிறுவனத்தின் 1.0 லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம், இது 114bhp மற்றும் 178Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிக்ஸ்-ஸ்பீட் ஏடீ உடன் இணைக்கப்படலாம்.
அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த கார் ரெனோ கைகர், நிசான்மேக்னைட், மாருதி பிரெஸ்ஸா, மாருதி ஃப்ரோன்க்ஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர்டைசர், கியா சோனெட் மற்றும் ஹூண்டாய் வென்யூ ஆகியவற்றுடன் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்