- இந்த மாடலின் முன்பதிவு இன்று (2 செப்டம்பர் 2024) மாலை 5 மணிக்குத் தொடங்கும்
- ஸ்கோடா விரைவில் ஸ்போர்ட்லைன் வெர்ஷனையும் அறிமுகப்படுத்தும்
ஸ்கோடா இன்று ஸ்லாவியாவின் மான்டே கார்லோ எடிஷன் இன்று (செப்டம்பர் 2, 2024) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதற்கு முன்னதாக, ஸ்கோடா ஸ்லாவியாவின் மான்டே கார்லோ எடிஷன் உள்ளூர் டீலர்ஷிப்களுக்கு வரத் தொடங்கியுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் இதன் முன்பதிவு தொடங்கும்.
இங்குள்ள படங்களை பார்க்கும்போது, புதிய ஸ்லாவியா மான்டே கார்லோ எடிஷன் சிக்னேச்சர் ரெட் நிறத்தில் வழங்கப்படும் என்பது தெளிவாகிறது. மேலும், இது கிரில், பூட்லிடில் பேட்ஜிங், அலோய் வீல்ஸ் மற்றும் ஓஆர்விஎம்கள் போன்ற பல பிளாக்-அவுட் எலிமெண்ட்ஸ்ஸைப் பெறுகிறது. ஃபெண்டரில் மான்டே கார்லோ பேட்ஜிங், பூட்லிட் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் டார்க் டெயில்லைட்ஸ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
இன்டீரியர் பற்றி பேசும்போது, 2024 ஸ்கோடா ஸ்லாவியா மான்டே கார்லோ அல்-பிளாக் தீம், டாஷ்போர்டில் ரெட் இன்ஸெர்ட்ஸ், மான்டே கார்லோ பொறிக்கப்பட்ட ஃப்ரண்ட் ஹெட்ரெஸ்ட்ஸ், மான்டே கார்லோ ஸ்கஃப் பிளேட்ஸ் மற்றும் டூயல்-டோன் ரெட் மற்றும் பிளாக் சீட்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இதில் வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், எலக்ட்ரிக் சன்ரூஃப், 10-இன்ச் டச்ஸ்கிரீன் யூனிட் மற்றும் எட்டு இன்ச் ஃபுல் டிஜிட்டல் வர்ச்சுவல் காக்பிட் ஆகியவற்றைப் பெறும்.
ஸ்கோடா ஸ்லாவியா 1.0-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடன் வழங்கும் அதே வேளையில், மான்டே கார்லோ எடிஷனிலும் அதே விருப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த மோட்டார் 148bhp மற்றும் 250Nm டோர்க்கை சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் செவன்-ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வழங்கப்படும். ஸ்லாவியா மான்டே கார்லோவைத் தவிர, இந்த செக் பிராண்ட் குஷாக் மற்றும் ஸ்லாவியாவின் ஸ்போர்ட்லைன் வெர்ஷனையும் விரைவில் அறிமுகப்படுத்தும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்