- மார்ச் 2025க்குள் அறிமுகம் செய்யப்படலாம்
- இந்த எஸ்யுவியின் பெயர் 'நேம் யுவர் ஸ்கோடா' என்ற அடிப்படையில் அமைந்திருக்கும்
ஸ்கோடா இந்தியா இந்த மாத தொடக்கத்தில் புதிய சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவியை அறிமுகம் செய்வதாக அறிவித்து, தற்போது வரவிருக்கும் மாடலை டெஸ்ட் செய்யத் தொடங்கியுள்ளது. முதன்முறையாக சோதனை செய்யப்பட்ட புதிய ஸ்கோடா எஸ்யுவியின் டெஸ்ட் மாடல் முற்றிலும் மூடப்பட்டிருந்தது.
ஸ்பை ஷாட்களில் பார்த்தபடி, 2025 ஸ்கோடா சப்-ஃபோர் மீட்டர் எஸ்யுவி ஆனது ரேக்ட் செய்யப்பட்ட ரியர் விண்ட்ஷீல்ட், சி-வடிவ எல்இடி டெயில்லைட்கள், பூட் லிடில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் ஹோல்டர், ரூஃப் ரெயில்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் ஹை-மவுண்டட் ஸ்டாப் லேம்ப் ஆகியவற்றுடன் கிடைக்கும்.
ஸ்கோடாவின் புதிய எஸ்யுவி ஆனது எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், இரண்டாவது வரிசையில் இருப்பவர்களுக்கான ஹெட்ரெஸ்ட்கள், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வென்டிலேடெட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் ஃபோன் ப்ரொஜெக்ஷன், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் கனெக்டெட் கார் டெக்னாலஜி ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கோடாவின் வரவிருக்கும் இந்த எஸ்யுவி ஆனது 1.0-லிட்டர், த்ரீ சிலிண்டர், டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினைப் பெற வாய்ப்புள்ளது, இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் யூனிட்டுடன் இணைக்கப்படும். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இது மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, ரெனோ கைகர் மற்றும் நிசான் மேக்னைட் ஆகியவற்றுடன் போட்டியிடும். ஸ்கோடா தற்போது ஒரு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது, அதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய காருக்கு பெயரிட ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்