- இனி 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டீஎஸ்ஐ இன்ஜின்களுடன் கிடைக்கிறது
- ஸ்லாவியாவின் மான்டே கார்லோ எடிஷனுடன் வெளியிடப்பட்டது
ஸ்கோடா அதன் குஷாக் மற்றும் ஸ்லாவியா சீரிஸின் மற்றொரு புதிய ஸ்போர்ட்லைன் விருப்பத்தை சேர்த்துள்ளது. இந்த புதிய வேரியன்ட் கிளாசிக், சிக்னேச்சர், மான்டே கார்லோ மற்றும் பிரெஸ்டீஜ் வேரியன்ட்ஸுடன் இணைகிறது. இந்த புதிய ஸ்போர்ட்லைன் ட்ரிம் மான்டே கார்லோ போன்ற பிளாக்-அவுட் டிசைன் எலிமெண்ட்ஸைக் கொண்டுள்ளது.
ஸ்லாவியா ஸ்போர்ட்லைனில் R16 பிளாக் அலோய் வீல்களையும், குஷாக் R17 பிளாக் அலோய் வீல்களையும் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன. டாப்-ஸ்பெக் மாடலைப் பொறுத்து, இந்த புதிய ட்ரிம் ஆறு ஏர்பேக்குகளையும் பெறுகிறது. கூடுதலாக, இந்த ஸ்போர்ட்டி ட்ரிமில் எலக்ட்ரிக் சன்ரூஃப், அலோய் ஃபுட் பெடல்ஸ், கனெக்டிவிட்டி டோங்கள், ரெயின்-சென்சிங் வைப்பர்ஸ் மற்றும் ஆட்டோ டிம்மிங் ரியர்-வியூ மிரர் போன்ற அம்சங்களும் உள்ளன.
இன்ஜின் விவரங்கள் மற்றும் போட்டியாளர்
இதில் 1.0 லிட்டர் டீஎஸ்ஐ மற்றும் 1.5 லிட்டர் டீஎஸ்ஐ இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இரண்டுமே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் விருப்பத்தைக் கொண்டுள்ளன, ஆனால் 1.0-லிட்டர் டீஎஸ்ஐ மட்டும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது. இதன் 1.0-லிட்டர் இன்ஜின் 114bhp/178Nm டோர்க்கை உருவாக்குகிறது, அதே நேரத்தில் 1.5-லிட்டர் இன்ஜின் 148bhp பவரையும் 250Nm டோர்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஸ்லாவியா ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஃபோக்ஸ்வேகன் வர்டஸ் போன்றவற்றுடன் போட்டியிடுகிறது. அதே நேரத்தில், குஷாக் ஸ்போர்ட்லைன், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற எஸ்யுவிகளுடன் போட்டியிடும்.
ஸ்கோடா ஸ்லாவியா ஸ்போர்ட்லைன் விலைகள்
ஸ்கோடா ஸ்லாவியா ஸ்போர்ட்லைன் 1.0 டீஎஸ்ஐ எம்டீ - ரூ 14.05 லட்சம்
ஸ்கோடா ஸ்லாவியா ஸ்போர்ட்லைன் 1.0 டீஎஸ்ஐ ஏடீ - ரூ 15.15 லட்சம்
ஸ்கோடா ஸ்லாவியா ஸ்போர்ட்லைன் 1.5 டீஎஸ்ஐ ஏடீ - ரூ 16.75 லட்சம்
ஸ்கோடா குஷாக் ஸ்போர்ட்லைன் விலைகள்
ஸ்கோடா குஷாக் ஸ்போர்ட்லைன் 1.0 டீஎஸ்ஐ எம்டீ - ரூ 14.70 லட்சம்
ஸ்கோடா குஷாக் ஸ்போர்ட்லைன் 1.0 டீஎஸ்ஐ ஏடீ - ரூ 15.80 லட்சம்
ஸ்கோடா குஷாக் ஸ்போர்ட்லைன் 1.5 டீஎஸ்ஐ ஏடீ - ரூ 17.40 லட்சம்
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்