- இந்த சப்-ஃபோர் காம்பேக்ட் எஸ்யுவி இந்தியாவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது
- 1.0-லிட்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்
சில நாட்களுக்கு முன்பு, ஸ்கோடா தனது புதிய சப்-ஃபோர் காம்பேக்ட் எஸ்யுவிக்கு 'கைலாக்' என்று பெயரிட்டது, மேலும் இந்த கார் பிப்ரவரி 2025 க்குள் ஷோரூம்களை அடையும் என்பதை இப்போது அறிந்திருக்கிறோம். இதன் பொருள் இந்த ஆண்டு இறுதிக்குள் கார் வெளியிடப்படலாம் மற்றும் அதன் உற்பத்தி அதே நேரத்தில் தொடங்கும். ஜனவரி 2025 இன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் 2025 இந்தியா மொபிலிட்டி எக்ஸ்போவின் போது ஸ்கோடா கைலாக்கின் விலைகளை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
ஸ்கோடாவின் இந்தியா 2.0 ப்ரோக்ராமின்கீழ் தயாரிக்கப்படும் மூன்றாவது கார் ஆகும், மேலும் இது ஆட்டோமேக்கரின் 1.0 லிட்டர் டீஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும், இது 113bhp மற்றும் 175Nm டோர்க்கையும் உருவாக்கும். இந்த இன்ஜினுடன் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் சிக்ஸ்-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கும்.
இந்த காரின் தோற்றம் குஷாக்கைப் போலவே இருக்கும், ஆனால் சப்-ஃபோர் நீளத்தின்படி, சி-பில்லருக்குப் பிறகு இது சற்று சுருக்கப்படும். அதன் கேபின் மற்றும் அம்சங்களில் அதிக மாற்றம் எதிர்பார்க்கப்படாது, அதன் செக்மெண்ட்டில் இது ஒரு பிரீமியம் காராக இருக்கும்.
ஹூண்டாய் வென்யூ, கியா சோனெட், மாருதி சுஸுகி, மாருதி பிரெஸ்ஸா, டொயோட்டா டைசர் மற்றும் மஹிந்திரா XUV3XO போன்ற கார்ஸுடன் கைலாக் போட்டியிடும்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்