- கைலாக்கின் விலைகள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும்
- கைலாக் நெக்ஸான், வென்யூ, பிரெஸ்ஸா மற்றும் சோனெட் போன்ற கார்களுடன் போட்டியிடும்
ஸ்கோடா இந்தியா தனது மூன்றாவது காரை MQB-A0-IN பிளாட்ஃபார்மில் விரைவில் இந்தியாவிற்கு கொண்டு வர தயாராகி வருகிறது. நிறுவனம் இந்த புதிய மாடலை கைலாக் என்ற பெயரில் அறிமுகப்படுத்தும், இது பிராண்டால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் அதிகரபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், இந்த சப்-ஃபோர் காம்பேக்ட் எஸ்யுவி மீண்டும் ஒருமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, இதில் இப்போது இந்த காரை வாங்குபவர்களுக்கு சிங்கள்-பேன் எலக்ட்ரிக் சன்ரூஃப் கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த கார் ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், ரெனோ கைகர், கியா சோனெட், நிசான் மேக்னைட், மஹிந்திரா XUV 3XO மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற கார்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 கைலாக்கின் இந்த புதிய ஸ்பை ஷாட்ஸில், இந்த வரவிருக்கும் மாடல் ரெட் வண்ணத்தில் வழங்கப்படுவதையும் காணலாம். அதே நேரத்தில், முந்தைய டீஸரில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் டிசைன், புதிய எல்இடி டிஆர்எல்கள் மற்றும் இன்வர்டெட் எல்-வடிவ எல்இடி டெயில்லைட்ஸ் இருப்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது. இது தவிர, இது ரூஃப் ரெயில்ஸ், ஷார்க்-ஃபின் ஆண்டெனா, ஸ்லோப்பிங்க் சி-பில்லர் மற்றும் டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட் ஹோல்டரையும் பெறும் என்று சமீபத்திய படங்களில் காணப்பட்டது.
இருப்பினும், அதன் இன்ஜின் விருப்பங்கள் குறித்து பிராண்டால் இதுவரை எந்த தகவலும் பகிரப்படவில்லை. குஷாக் மற்றும் ஸ்லாவியா போன்ற இந்த மாடலில் ஸ்கோடா 1.0 லிட்டர் த்ரீ-சிலிண்டர் டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜினையும் வழங்க முடியும் என்று நாங்கள் யூகிக்கிறோம், இது 114bhp மற்றும் 178Nm டோர்க்கையும் உருவாக்கும். இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்டர் ஆட்டோமேட்டிக் யூனிட் டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் வழங்கப்படலாம்.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்