- புதிய காம்பேக்ட் காரின் பெயர் 'கைலாக்'
- மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ மற்றும் பலவற்றுக்கு போட்டியாக கைலாக் இருக்கும்
ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது வரவிருக்கும் காம்பேக்ட் எஸ்யுவிக்கு கைலாக் என அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா 3XO, கியா சோனெட், நிசான் மேக்னைட், ரெனோ கைகர் மற்றும் டாடா நெக்ஸான் போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடும்.
பிராண்டின் இந்தியா 2.0 ப்ரோக்ராமின் கீழ் மூன்றாவது ஸ்கோடா காராகும். கைலாக், கைமாக், கைரோக், காரிக் மற்றும் க்விக் உள்ளிட்ட நான்கு பெயர்களில் கைலாக் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதிய ஸ்கோடா கைலாக்கின் டெக்னிகல் விவரங்கள் தற்போது குறைவாகவே உள்ளன. இது சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் மற்றும் டோர்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் 1.0 லிட்டர், டீஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் இணைக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த மோட்டாரின் பவர் 114bhp மற்றும் 178Nm என மதிப்பிடப்படலாம்.
ஸ்கோடாவால் பகிரப்பட்ட முந்தைய டீஸர்கள் மற்றும் 2025 ஸ்கோடா கைலாக்கின் சமீபத்திய ஸ்பை ஷாட்ஸில் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் செட்டப், எல்இடி டிஆர்எல்ஸ், புதிய கிரில், ஸ்கோடா லோகோவுடன் செதுக்கப்பட்ட பானெட், தலைகீழான எல்-வடிவ எல்இடி டெயில்லைட்ஸ், புதிய அலோய் வீல்ஸ் மற்றும் ரூஃப் ரெயில்ஸ் போன்ற முக்கிய அம்சங்களைக் குறிப்பதாக உள்ளன. இன்டீரியர் மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் தற்போது சரியாக தெரியவில்லை.
மொழிபெயர்த்தவர்: ஐசக் தீபன்